பெண்ணை 100 முறை தென்னம்மட்டையால் அடிக்க உத்தரவிட்ட பள்ளிவாசல் பரிபாலனர் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவருக்கு தென்னம்மட்டையால் 100 அடிகளை வழங்கிய குற்றச்சாட்டில் முஸ்லிம் பள்ளி வாசல் ஒன்றின் பரிபாலன சபையை சேர்ந்த 4 பேர் கால வரையறையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் நல்லன்தெழுவ ஜூம்மா பள்ளி வாசலின் பரிபாலன சபையை சேர்ந்த நால்வரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் பந்துல குணரத்னகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் வந்த நபர் ஒருவர் பலவந்தமாக பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான பெண் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணை பள்ளி வாசலுக்கு அழைத்து அதன் பரிபாலன சபையினர் 100 முறை தென்னம்மட்டையால் தாக்கி தண்டனை வழங்கியுள்ளனர்.

இது சம்பந்தமாக பெண் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மற்றுமொரு முறைப்பாட்டை செய்துள்ளார்.சம்பவம் குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து பெண்ணை தென்னம் மட்டையால் தாக்கி தண்டனை வழங்க உத்தரவிட்ட ஜூம்மா பள்ளி வாசலின் பரிபாலன சபையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்னர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*