என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. குடும்ப வறுமை காரணமாக விபச்சாரத்தில் ஈடுபட்டேன். ஸ்வேதா பாசு

பிறப்பு : - இறப்பு :

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்ற நடிகை ஸ்வேதா பாசு, தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ஸ்வேதா பாசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஐதராபாத் ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டு பெண்கள் மறு வாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

ஸ்வேதாபாசுவுடன் மும்பை தொழிலதிபர்கள் மூன்று பேர் போலீஸாரிடம் சிக்கினாலும் அவர்களுடைய பெயர் வெளியே வரவில்லை. இந்நிலையில் ஸ்வேதாபாசுவை பெண்கள் காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவருடைய தாயார் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஸ்வேதா பாசுவை விடுவித்தது.

பெண்கள் காப்பகத்தில் இருந்து வெளியே வந்தா ஸ்வேதா பாசு கூறியபோது, ‘என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைக்கவில்லை. குடும்ப வறுமை காரணமாக நானாகத்தான் இந்த வழியை தேர்ந்தெடுத்தேன். மேலும் நான் சொல்லாத பல விஷயங்களை ஊடகங்கள் தங்கள் இஷ்டத்திற்கு எழுதியுள்ளதுதான் என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. என்னுடைய இந்த நிலைக்கு யாரையும் நான் குற்றம் கூற விரும்பவில்லை என்று கூறினார்.

ஸ்வேதாபாசுவுக்கு தற்போது பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வாய்ப்புகள் அதிகம் வந்துகொண்டிருப்பதாகவும், அவர் நடிகையாக தனது பணியை தொடருவார் என்றும் அவருடைய தாயார் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit