ஒபாமாவுடன் துப்பாக்கியுடன் லிப்ட்டில் சென்ற பாதுகாவலர் டிஸ்மிஸ். அமெரிக்காவில் பரபரப்பு.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாதுகாவலராக துப்பாக்கியுடன் லிப்டில் சென்ற தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எபோலா தொற்று குறித்து சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். Centers for Disease Control and Prevention என்ற மைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒபாமாவை, லிப்டில் அழைத்து செல்ல அங்கு பாதுகாப்பாளராக பணிபுரிந்த Kenneth Tate எனும் 47 வயது பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

ஒபாமாவை Kenneth Tate லிப்ட்டில் அழைத்து சென்றபோது அவர் பையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அதன்பின்னர் அவர் ஒபாமாவின் காரை தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டிய ஒபாமாவின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய Kenneth Tate ‘நான் அன்று எப்போதும் போல எனது பாதுகாவலர் பணியை பார்த்துவந்தேன். என்னிடம் துப்பாக்கி இருந்தது. அப்போது நான் ஒபாமாவுடன் சென்று, அவருக்கு லிப்ட் ஆப்பரேட் செய்ய வேண்டும் எனக் கூறினர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

லிப்டில் ஒபாமா என் பெயரை கேட்டார். அவரிடம் எனது பெயரை சொன்னேன். அவர் என்னுடன் கை குலுக்கினார். எனக்கு இது ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அவர் புறப்படும்போது அவரது காரை எனது மொபைலில் படம் எடுத்தேன். ஒபாமாவின் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் என்னை அழைத்து சென்று மொபைலில் இருந்த படத்தை அழிக்க சொன்னார்கள். மேலும், ஒபாமாவுடன் சென்றபோது என்னிடம் துப்பாக்கி இருந்ததையும் அவர்கள் தவறு என கூறினர்’ எனத் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*