இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பிற்கு சர்வதேச கண்காணிப்பு பொறிமுறை உடனடித் தேவை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் சிங்கள காவல்துறையினரால் கடந்த வியாழன் இரவு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலையைச் சாலை விபத்து என வழக்கை முடிக்க முயன்ற இலங்கை காவல்துறையின் சதியை ஈழ மக்கள், மாணவர்களின் போராட்டம் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாதத்தின் வெளிப்பாடான இப்படுகொலை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசின் கீழ் பாதுகாப்பில்லை என்பதை மீண்டுமொரு முறை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த மாணவர் நடராசா கசன், கந்தரோடையைச் சேர்ந்த பவுண்ராச் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் இரவில் பல்கலைக்கழகம் திரும்பிக் கொண்டிருந்த பொழுது காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளனர். காவல்துறை சோதனைப் பணியின் பொழுது நிற்காமல் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என்பது, தமிழர்கள் மீது ஒரு மிகப்பெரும் இன அழிப்பு போரை நடத்திய பின்னரும் இப்போதும் தொடரும் சிங்களப் பேரினவாத ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகின்றது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு போரில் தமிழர்களை பாதுகாக்க தவறிய ஐ.நா.வும் அனைத்துலகமும், பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதியை மறுத்து இனக்கொலை இலங்கை அரசைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவும், மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றம் எனும் பெயரில் தமிழர்கள் மீதான இனஅழிப்பை மூடி மறைக்க இலங்கைக்கு உதவுகின்றனர். ஆட்சி மாற்றம் தமிழர்களின் பாதுகாப்பிற்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்பதற்கு இந்த அரச பயங்கரவாதத்தின் படுகொலையே சாட்சி.

இனக் கொலை இலங்கை அரசின் இராணுவ, கடற்படைக் கூட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மாணவர்கள் படுகொலைக்குப் பின்னரும் கூட இரண்டு நாட்களுக்கு முன்பு கொச்சின் துறைமுகத்தில் இரண்டு நாட்டு கப்பற்படைகளும் கூட்டு நடவடிக்கையை இந்திய அரசு ஒருங்கிணைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும், இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழர்களின் நீதியையும் மறுப்பதாகவே உள்ளது.

உலக அரங்கில் மீண்டும் மீண்டும் இனக் கொலை இலங்கை அரசைக் காப்பது உலகில் பெரிய சனநாயக நாடு பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவிற்கு அழகா? இது இந்தியக் குடிமக்களை ஏமாற்றும் செயலாகும்.

இந்த மாணவர்கள் படுகொலையை இந்திய அரசும், தமிழக அரசும் உடனடியாகக் கண்டிக்க வேண்டும்.

இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவ, கடற்படை கூட்டு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பிற்கு சர்வதேச கண்காணிப்பின் கீழ் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை கொண்டுவர ஐ.நா.வும், அனைத்துலக நாடுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்வரும் அக்டோபர் 26 ஆம் நாள் புதன்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழீழ ஏதிலியருக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்தப் போராட்டத்தில் இளந்தமிழகம் இயக்க கலந்து கொள்கிறது. மேலும் தமிழ் மக்கள் பெருந்திரளாக இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இது தொடர்பாக நடக்கும் அனைத்து அமைப்புகளின் போராட்டங்களையும் இளந்தமிழகம் இயக்கம் ஆதரிக்கிறது. ஈழ ஆதரவு இயக்கங்கள் அனைத்தும் இணைந்து தமிழீழ மாணவர்கள் படுகொலையைக் கண்டித்துப் போராட்டங்களை முன்னெடுப்போம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*