குழந்தை பாக்கியம் பெற இதெல்லாம் பண்ணுங்க!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருமணம் முடிந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தை பாக்கியம் இல்லை என்றாலே கோவில் கோவிலாக சென்று வழிபடுவது வழக்கம், ஆனால் அவர்களின் ஆரோக்கியமற்ற உடல்நிலைகள் தான் முக்கிய காரணமாக உள்ளது.

பெண்கள் பத்து மாதம் கருவில் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க நிறைய சிரமங்களையும், மனரீதியாக, உடல் ரீதியாக பலவகையான பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.

  • பெண்கள் தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். மேலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமான உணவுகள், கலப்படம் கலந்த உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
  • பெண்கள் எப்போது அவர்களின் குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த காய்கறி பழங்கள் மற்றும் தயிர் ஆகிய உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.
  • நம் அன்றாட உணவில் ஃபோலிக் அமில சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் பெண்கள் பிரசவக் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
  • பெண்கள் கருவுறுதலுக்கு முன்பு யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை நல்ல ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
  • பெண்கள் கருத்தரிப்பதற்கு முன் மற்றும் குழந்தை பிறக்கும் வரை அதிக மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தினமும் காலையில் தியானம் செய்து வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பெண்காள் கருவுறுதலுக்கும் முன்பு அக்குபஞ்சர் நிபுணர்களை பார்த்து, சீரான அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
  • பெண்கள் உடலுறவில், அவர்களின் மாதவிடாய் முடிந்த ஐந்தாவது நாளில் இருந்து பத்தாவது நாட்களில் ஈடுபட வேண்டும். ஏனெனில் பெண்களின் இந்த நாட்களில் அவர்களில் கருவின் நலன் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அவர்கள் கருத்தரிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*