மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் ‘உன்னதம் விழா'(படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இறக்காமம் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் ‘உன்னதம் விழா’ நேற்றிரவு (21) இறக்காமம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இறக்காமம் மீடியா போரத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.பிக்கிர் தலைமையில் இடம்பெற்ற இப்பெரு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும், வர்த்தகக் கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதுறுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

படங்கள் இங்கே

மேலும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், கனிய வளங்கள் கூட்டுத் தாபனத் தலைவருமான எம்.ஏ.அப்தல் மஜீட், முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வீ.சி.இஸ்மாயில், அசோக் லங்கா நிறுவனத் தலைவர் சிராஸ் மீராசாஹீப்;, உள்ளுர் அரசியல்தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள் எனப்பலர் கலந்து கொண்டதோடு, ஆயிரக் கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் இறக்காமம் பிரதேசத்தில் பல்துறைகளிலும் வரலாற்றுச் சாதனை படைத்து, மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த 100பேர் பொன்னாடை போற்றி, சினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியில் அதிதிகளாகக் கலந்து கொண்ட அமைச்சர்களான றிசாட் பதுறுதீன், பைசர் முஸ்தபா ஆகியோர் ஊர்த்தலைமைகளாலும், இளைஞர்களாலும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.

அமைச்சர் றிசாட் இங்கு உரை நிகழ்த்துகையில்:- ‘வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டுமென்று உலக நாடுகளெல்லாம் கங்ஙனம் கட்டிச் செயற்படுகின்ற வேளையில், நல்லாட்சி அரசின் பலம் மிக்க அமைச்சை வைத்துக் கொண்டிருக்கும் நான், நமது சமூகத்தின் நலனில் அக்கரை கொண்டதற்காக பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும், யாரிடத்திலும் வடக்கையும், கிழக்கையும் இணைக்கக் கூடாது என்று மிகத் தைரியமாகச் சொல்லி வருகிறேன். எனக்கு இத்தனை கோடி ரூபாக்களைத் தாருங்கள் இந்தத் திட்டத்திற்கு கை உயர்த்துகிறேன் என்கின்ற கையாலாகாத தலைமையல்ல நான். பணத்திற்கு அடிமையாகாத ஒரு சிறந்த, ஒழுக்கமுள்ள, உன்னதமான சமூகமாக தலைநிமிர்ந்து வாழ்வதற்கான திட்டங்களை நாம் வகுத்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்காக நீங்கள் எமக்காகப் பிரார்;தனை செய்யுங்கள்’ எனத் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*