அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாண போராட்டம் நடத்திய PETA அமைப்பு. லண்டனில் பரபரப்பு. (Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

லண்டனில் உள்ள PETA என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் விலங்குகளை கொலை செய்ய கூடாது, அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை வலியுறுத்தி Trafalgar Square என்ற இடத்தில் நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலக சைவ உணவு தினம் கொண்டாடுவதை முன்னிட்டு PETA அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சைவ உணவை மட்டும் உட்கொள்ள வலியுறுத்தும் வகையிலும் நூதன போராட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்து நேற்று முன் தினம் மாலை லண்டனில் புகழ்பெற்ற Trafalgar Square முன் நூற்றுக்கணக்கான ஆண்களும் இளம்பெண்களும் குவிந்தனர்.

பின்னர் திடீரென அனைவரும் தங்கள் உடைகளை களைந்துவிட்டு நிர்வாண நிலையில், ரத்தம் போல சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும் சாயங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு நூதன போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், பலர் இனிமேல் அசைவ உணவிற்காக விலங்குகளை கொலை செய்வதை நிறுத்திவிட்டு சைவ உணவிற்கு மாறுவார்கள் என தாம் நம்புவதாகவும், PETA அமைப்பின் இயக்குனர் மிமி பெக்கெச்சி அவர்கள் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*