அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’… ஷகீலா பட டைட்டிலாம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு கடந்த வாரம் அஜீத்தின் 55வது படத்தின் டைட்டில், ‘என்னை அறிந்தால்’ என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர் கௌதம்மேனம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள். அஜீத்தின் 55வது படம் இது என்பதால் இதுவரை இப்படத்தை தல 55 என்றே குறிப்பிட்டு வந்தனர்.

கடந்த வாரம் தான் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. என்னை அறிந்தால் என்ற தலைப்பு வெளியிடப்பட்ட சில நொடிகளிலேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

ஷகிலா படம்…

இந்நிலையில், தற்போது இப்படத் தலைப்பு வேறு ஒரு சிக்கலில் மாட்டியுள்ளது. அதாவது கடந்த 2012ம் ஆண்டு ஷகிலா நடிப்பில் வெளியான ஒரு படத்தின் பெயரும் ‘என்னை அறிந்தால்’ தான்.

ஏ படம்…

இப்படத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவுடன், ரேஷ்மாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் சென்சார் போர்டில் சுத்தமான “ஏ” சர்டிபிகேட் பெற்றது. பி கிரேட் படம் இது.

ஹேப்பி அண்ணாச்சி…

இந்தப் படத் தலைப்பைப் போய் அஜீத் படத்துக்கு வைத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் தற்போது குஷியாகி விட்டனர். இந்தத் தலைப்பை வைக்கத்தான் இத்தனை பில்டப்பா என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஷகீலா பட போஸ்டருடன் கமெண்ட் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

மத்ததெல்லாம் டூப்ளிகேட்…

இதுதான் (ஷகீலா பட டைட்டில்) பாஸ் ஒரிஜினல், மத்ததெல்லாம் டூப்ளிகேட் என்றும் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மனவருத்தம்…

இதனால், காத்திருந்து கிடைத்த பட டைட்டில் சந்தோஷத்தைக் கொண்டாட முடியாமல் அஜீத் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனராம்.

என்ன செய்யப் போகிறார்…?

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு கௌதம்மேனன் தனது படத் தலைப்பை மாற்றுவாரா அல்லது இதே தலைப்பில் துணிந்து ரிலீஸ் செய்வாரா என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்படியெல்லாம் சிக்கல் வருதுப்பா ஹீரோக்களுக்கு!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit