ஐ.நா.விசாரணைக் குழுவிற்கு சாட்சியங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பிறப்பு : - இறப்பு :

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவிற்கு சாட்சியமளிக்கும் கால அவகாசம் முடிவடைந்த போதிலும், சாட்சிய ங்களை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய கால வரையறையின் பின்னரான சாட்சியங்களையும் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 30-ம் திகதியுடன் சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளும் காலவரையறை பூர்த்தியாகின்றது.

சாட்சியமளிப்பதற்கான கால வரையறை உத்தியோகபூர்வமாக மீள நீடிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.

எனினும், சாட்சியங்கள் அளிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வழிவகைகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வகையிலான சாட்சியங்களை கிடைக்கப்பெற காலஅவகாசம் தேவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரொபர்ட் கொல்வில்லி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான பல்வேறு சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit