2100 ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள கணிய எரிபொருள் தீர்ந்து விடும்!:ஐ.நா இன் IPCC அறிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கட்டுப் படுத்தப் படாத தொடர்ச்சியான கணிய எரிபொருள் (fossil fuel) அகழ்வு மற்றும் பயன்பாடு நீடித்தால் 2100 ஆம் ஆண்டளவில் அது தீர்ந்து விடும் எனவும் அதனுடன் ஆபத்தான பருவநிலை மாற்றமும் ஏற்படும் என்றும் ஐ.நா ஐப் பின்புலமாகக் கொண்டு இயங்கும் IPCC எனும் கால நிலை மாற்றத்துக்கான அரசாங்களுக்கு இடையேயான குழு எச்சரித்துள்ளது.

IPCC மேலும் கூறுகையில் 2050 அளவில் உலகின் மிகப் பெரும்பான்மையான மின் பேட்டரிகள் மிகக் குறைந்த கார்பன் வெளியீட்டு முறைகளில் கட்டாயம் தயாரிக்கப் பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதுடன் இல்லாவிட்டால் உலகம் மிக மோசமான அதே நேரம் மீளத் திரும்ப முடியாத காலநிலை சீர்கேட்டை நிச்சயம் சந்தித்தே தீர வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளது. டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் கடந்த ஒரு வாரமாக விஞ்ஞானிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையே நடந்த விவாதத்தின் பின்னர் IPCC இன் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2015 இறுதிக்குள் உலக நாடுகள் இணைந்து காலநிலை சீர்கேட்டை எதிர்கொள்ள அல்லது இயன்றளவு தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் காலநிலை மாற்றம் அல்லது சீர்கேடு தொடர்பான பல எச்சரிக்கை அறிக்கைகளை IPCC வெளியிட்டுள்ளது. அவற்றில் இருந்தும் இம்முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் மீள வலியுறுத்தப் பட்டுள்ள முக்கிய விடயங்கள் கீழே:

1. நிகழ்காலத்தில் உலகம் முன்பிருந்ததை விட வெப்பமாகி வருவது மிகத் தெளிவான ஒன்று என்பதுடன் இக்கால நிலை மாற்றத்தில் அதிகளவு மனிதனின் பங்கு இருப்பதும் நிரூபிக்கப் பட்ட ஒன்று

2.1983 முதல் 2012 ஆம் ஆண்டு வரையான 30 வருடங்களே கடந்த 1400 வருடங்களில் மிக வெப்பமான காலப் பகுதி ஆகும்.

3.காலநிலை சீர்கேடு அல்லது புவி வெப்பமயமாதல் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. இதற்கு உதாரணமாக சமுத்திரங்களின் அமிலத் தன்மை அதிகரிப்பு, ஆர்டிக் சமுத்திரத்தின் பனிப்பாறைகள் உருகுதல், உலகில் பல இடங்களில் மிக மந்தமான பயிர் விளைச்சல் ஆகியவற்றைக் கூற முடியும்

4.கார்பன் வெளியீட்டில் உறுதியான நடவடிக்கை மேற் கொள்ளப் படாவிட்டால் எதிர்வரும் தசாப்தங்களில் புவி வெப்பநிலை அதிகரிப்பதுடன் இது தற்போதைய நூற்றாண்டின் இறுதியில் 5C அதிகபட்சமாக இருக்கும்.

ஐ,நா பொதுச் செயலாளர் இவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கையில், ‘விஞ்ஞானம் ஏற்கனவே பேசி விட்டது! இதில் இனி மறுப்பதற்கு எதுவுமில்லை! உலகத் தலைவர்கல் காரியம் ஆற்ற வேண்டிய தருணம் இது. காலம் இப்போது நமது பக்கத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*