நாமல் கள்வன் என அவரே ஒப்புக்கொண்டார்.!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Saidulla Marikkar

இந்த அரசில் களவாட எண்ணியுள்ளவர்களுக்கு காய்ச்சல்பிடிக்க முன்னர், முன்னைய அரசாங்கத்தில் களவாடியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்று(17) ஒருகொடவத்தை – அம்பத்தலை தாழ் மட்ட பாதை அபிவிருத்தியினால் காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த அரசில் மேற்கொண்ட களவு, மோசடி மற்றும் கொலைகளுக்கு தண்டனை வழங்கப்படுவதற்காகவும் விசேடமாக பொது மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்ததனால் ஏற்பட்ட இழப்புகளுக்காக மக்களுக்கு நியாயம் வழங்குவதற்காகவுமே நாங்கள் நல்லாட்சியை கொண்டு வந்தோம். களவாடியவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில் தான் இதன் முக்கியத்துவம் பொதிந்துள்ளது.

விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நாமல் ராஜபக்ஷ அவருக்கு எதிராக எப்.சி.ஐ.டியால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு 200 மில்லியன் ரூபா நட்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளதோடு மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பல கோடிகள் கேட்டு உரிமை கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

வாய் பொய் சொன்னாலும் நாக்கு பொய் சொல்லாது என்பார்கள். எப்.சி.ஐ.டியில் நாமல் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்பவர் அவரை விட பெரிய கள்வனாம் என்று நாமல் கூறுகிறார். இதன் மூலம் அவர் திருட்டு செய்ததை ஒப்புக் கொள்கிறார்.

நாங்கள் செய்த களவுகளை விசாரிக்க வேண்டாம். அதேபோன்று ஏனையவர்கள் மேற்கொண்ட களவுகளையும் விசாரிக்க அவசியமில்லை என்பதையே இவர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் அரசியல்வாதிகள் என்பவர்கள் களவெடுப்பதற்காகவே உள்ளவர்கள். பதவிக்கு வருவது சேவை செய்வதற்கல்ல களவெடுப்பதற்காகவே. என்பதை இவர்கள் உறுதி செய்கின்றனர்.

தற்பொழுது, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு இவைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவையான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு நான் மக்களை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் 123 பேருக்கு 300 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit