ஈராக்கில் ISIS இன் வெறிச் செயலுக்குப் பலியாகி வரும் சுன்னி பழங்குடியினர்!:ஊடகங்கள் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஈராக்கில் பேஷ்மெர்கா உட்பட குர்துப் படை ISIS இற்கு எதிரான போரில் ஈடுபட்டு வருவதால் ISIS தாம் கைப்பற்றி வரும் பகுதிகளில் நூற்றுக் கணக்கில் சுன்னி பழங்குடியினரைக் கொன்று வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.

ஈராக் அரசு சமீபத்தில் வெளியிட்ட தகவலில் மேற்கு அன்பார் மாநிலத்தில் மட்டும் ஈராக்கின் சுன்னி பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த 322 உறுப்பினர்கள் ISIS போராளிகளால் கொல்லப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து ஈராக்கின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கையில் ISIS ஆல் கொல்லப் பட்ட சுமார் 50 சடலங்கள் ஓர் கிணற்றில் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும் அல்-பு நிம்ர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 65 பேர் கடத்தப் பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. IS போராளிகள் கூட சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்பதுடன் தற்போது இவர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் பாரிய நிலப் பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈராக் அமைச்சு கூறுகையில் தற்போது IS வசம் 65 பிணைக் கைதிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பழங்குடி அமைப்பின் மூத்த தலைவரான அல் கௌட் பிபிசிக்கு கூறுகையில் ISIS இடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தாம் அரசிடம் ஆயுதங்களை வேண்டியதாகவும் ஆனால் அரசு வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளித்து விட்டு எதுவுமே செய்யவில்லை எனவும் விசனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சில வாரங்களாகவே பழங்குடிப் போராளிகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு அன்பார் மாநிலத்தின் ஹிட் என்ற நகரை ISIS கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் ISIS இடம் இருந்து தப்பிக்கவும் அவர்கள் கைப்பற்றிய தமது ஹிட் நகரை மீட்பதற்கும் அல்பு நிம்ர் அமைப்பு போராடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அன்பார் மாநிலத்தில் தற்போது 10 000 அல்பு நிம்ர் பழங்குடியினர் ஹிட் நகரை மீட்கக் கூடிய வலிமையுடன் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளதுடன் இவர்கள் அரசின் உத்தரவுக்கும் அமெரிக்க விமானத் தாக்குதல்களை வழிநடத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும் அல் கௌட் கூறியுள்ளார்.

இதேவேளை ஹிட்டுக்கு வெளியே ஒரு பெரிய புதைகுழியில் அல்பு நிம்ர் பழங்குடியினரின் 200 சடலங்கள் வரை கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும் இவர்கள் பொதுமக்கள் முன் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் மூத்த ஈராக்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*