
மேற்கிந்திய தீவு அணியின் பன்முக ஆட்டக்காரரான பிராவோ அண்மையில் இந்தியா சென்றுள்ளார்.
இந்தியா சென்ற அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் நடிகை ஸ்ரேயாவுடன் ஒன்றாக சுற்றுவது போல புகைப்படங்கள் வெளிவந்தன. அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிராவோவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது,
அதில், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் படத்தில் நடிக்க ஆசைபடுவதாக கூறியுள்ளார். அது மட்டுமில்லால் எனக்கு பாலிவுட் நடிகைகள் அனைவரும் மிகவும் பிடிக்கும் எனவும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தீபிகா படுகோனேவை பார்த்து பார்த்து ரசித்ததாகவும், அவரைக் கண்டு தான் சொக்கிப்போனதாகவும் கூறியுள்ளார்.
ஒரு தனியார் நிகழ்ச்சியின் போது நடிகை ஜாக்கிலின் பெர்ணாண்டசை பார்த்ததாகவும், அவரும் அழகாக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கரண் ஜோஹர் படத்தில் திபீகா படுகோனேவுடன் நடிப்பது என்றால் நான் இப்போதே ரெடி என்றும் கிரிக்கெட்டைப்போலத்தான் சினிமாவும், எல்லாவற்றிற்கும் முன் கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தனக்கு நிச்சயம் கிரிக்கெட்டுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை உள்ளது என்றும் அது ஏன் பொழுதுபோக்கான சினிமாவாக இருக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.