கங்குலி ஏன் அவ்வளவு கோபமாக டி-சர்டை கழற்றி எறிந்தார் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் என்றால் தான் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

ஆனால் 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டிகள், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை மிஞ்சும் அளவிற்கு இருந்தது.

இதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய போது, இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட போதும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் Flintoff 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் காரணமாக மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற Flintoff தான் அணிந்திருந்த டிசர்ட்டை கழற்றி மைதானத்தில் வலம் வந்தார். இது இந்திய வீரர்களுக்கு பெரிதும் ஆக்ரோஷத்தை எழுப்பியது.

அதைத் தொடர்ந்து அதே ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய போது இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று The Natwest Series தொடரை வென்றது.

இந்திய மண்ணில் FlintOff என்ன செய்தாரோ, அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றதும். கங்குலி தான் அணிந்திருந்த டிசர்ட்டை கழற்றி பழிக்கு பழி தீர்த்துக் கொண்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit