29 வயது பெண்ணை மணம் முடித்த 67 வயது அமைச்சர்! (படங்கள், காணொளி இணைப்பு )

பிறப்பு : - இறப்பு :

வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் தனது 67வது வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் (67). இவருக்கும் கொமிலா மாவட்டத்தில் உள்ள சந்தினா பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லா முன்ஷியின் மகள் ஹொனுபா அக்தர் ரிக்தாவுக்கும் (29) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி இவர்களின் திருமணம் கொமில்லா மாவட்டத்தில் உள்ள மீர்கோலா கிராமத்தில் கடந்த 31ம் திகதி நடைபெற்றது.

67year_minstermarrage

திருமண விழாவில் அமைச்சர் பக்கத்தில் இருந்து மட்டும் 700 பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண வரவேற்பு வரும் 14ம் திகதி நடைபெற உள்ளது. 1947ம் ஆண்டு பிறந்த ஹக், 3 முறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஹக்கின் திருமணத்தையொட்டி டாக்கா-சிட்டகாங் தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புதுமணத் தம்பதிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit