ஆக்ரோஷம் தொடரும்: ரகானே

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆகரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என இப்போட்டியின் துணை அணித்தலைவர் ரகானே கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையிலும் முதல் இடம் பிடித்தது.

இனி இந்த 2 அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்தொடரில் பங்கேற்கவிருக்கின்றன.

இதுகுறித்து ரகானே கூறியதாவது, நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டமே காரணம்.

இனி நடக்கவிருக்கும் போட்டியிலும் அதேபோன்று தான் செயல்படுவோம், எதிராளியின் பலம் பலவீனத்தை அறிவதைவிட, எங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படவேண்டும் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*