கனடாவும் தமிழர்களும்…

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குளம்வாழ் மீன் யாம்;
யாமறிந்த முன்னோரை
எல்லாம் தூக்கிச் சுமந்த,
நீரில் – எம்குருதி குமுழ,
எம்குளம் இழந்து வந்தோம்!
வான்கொடை நீர்,
யாவர்க்கும் உரித்தாக,
இவ்வணை வந்தோம்!

நா வேறால் யாம் வேறாய்…
தாய் நாவுக்காய் – தாய் நாட்டை
விட்டு வந்தோம்!

உப்பு நீர் தாண்டி,
உயிர் பிழைக்க,
உடல் இழுத்து,
உணவு இன்றி,
உணர்வற்று வந்தோம்!

இங்கு – அரண் பெற்றோம்!
ஆணி வேர் இழந்தாலும்,
விழுதுகள் காத்தோம்!
எம்மொழி தந்த,
அறம் காத்தோம்!
செய்ந்நன்றி கொன்றால்,
எம்பாட்டன் வள்ளுவன்,
எமை உளியால் கிழிப்பான்.
ஆக, மரங்கொத்தி போல்
உள் கொழுத்த – கூட்டை
மாய்க்காது, சிட்டு குருவியை,
சிறகடித்தோம்!

எம்மன நெருப்பை விசையாக்கி,
இந்நாட்டில் பொன் செய்தோம்!
எம்மால் இந்நாடும்,
இந்நாட்டால் யாமும் – ஒளிர…!
இம்மண்ணோடு மனம் கலந்தோம்!

இந்நாட்டு வரலாற்றில்
எம் குருதி இல்லை;
எம் குருதிக்கு மருந்திட்டது,
இம்மண்ணின் வரலாறு!

எம் உடல் நிறம் வேறு!
யாம் பிறந்த கொடி வேறு;
எம் நாசி, இம்மண்ணின்
கொடி வீசி பெற்ற
பிராணனை மறக்காது!

இம்மண்ணின் மொழி,
இம்மாநிலத்தின் பெருமை;
எம் அம்மை மொழி,
எம் பண்பின் அடையாளம்;
எம்நா மீட்டும் காற்றில்,
இம்மண்ணும், எம்அம்மையும்!

கலசமோ? சிலுவையோ?
யாம் மேல் நோக்க,
அது எம் இறை சுட்டும்!

ஒரு நாள் புதிதாய்ப் பிறந்தோம்!
அழியாத பழைய உடலுடன்…
விரட்டிய நாட்டில் குடியை
இழந்த நாங்கள் – அன்று
குடியுரிமையையும் விட்டு
கனடாவில் ஐக்கியமானோம்!
இனி நாங்கள் ஒரு நாளும் அகதி இல்லை!
இரண்டாந்தரக் குடிமக்கள் இல்லை!
ஈக்களாய்க் கொல்லப்படும்
பிறந்த நாட்டை விட
புகுந்த நாட்டில் – எம்
உயிரின் மதிப்பை
மிகுதியை உணர்ந்தோம்!

எம் ஒரு பாதி மொழி –
எம்பிள்ளைகளில் பிறழ;
மொத்தமாய்ப் பேரப்பிள்ளைகளில்
மறைய – எம் இனப்போரில்
யாமும் இறந்தததை அறிந்தோம்!

நீள்துயில் – பிறந்த மண்ணில்…!?
தாய் மண்ணைக் காணச் சென்றோம்!
சுழியில் இருந்து – அயலூரில்
சிகரம் தொட்டோம்!
எம்மூரில் – எங்கள் சிகரங்கள்
எல்லாம் சுழியாய்ப் போனது!
தாய் நாடு – புறம் தள்ள…

எம் கனேடியக் கல்லறை
சொல்லும் – இது எங்கள்
சேய் நாடு என்று…!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*