ஓய்வு நேரத்தில் அஸ்வின் செய்யும் காரியம்

பிறப்பு : - இறப்பு :

தேசத்திற்காக விளையாடி கலக்கிய தமிழக வீரர் அஸ்வின் தற்போது ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் அனுபவித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடரில் இந்திய 3-0 என வெற்றிப்பெற்றது. இதற்கு முக்கிய காரணமே இத்தொடரில் அஸ்வின் கைப்பற்றிய 27 விக்கெட்டுகள் தான்.

அஸ்வினின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தற்போது ஓய்வெடுத்து வரும் அஸ்வின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் தனது குழந்தை பருவ நாட்களை மறுபடியும் நிகழ்த்தி பார்த்தாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களுடன் செல்பி எடுத்து மீண்டும் அற்புதமான பழைய நாட்களுக்கு திரும்பியதாக பதிவிட்டுள்ளார், இத்துடன் தெருவில் விளையாடும் வீடியோ ஒன்றையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit