நியூயோர்க்கில் புதிய வகைத் தவளை இனம் கண்டுபிடிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகில் தனியாக வாழும் குடிமக்கள், சத்தமாகப் பேசும் டேக்ஸி ஓட்டுனர்கள், ஹிர்சூட் புரூக்ளினை சேர்ந்த புதிய ஃபேஷன்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியவர்களுக்கு மிகப் பிரசித்தமான நகரம் நியூயோர்க்.

ஆனால் தற்போது நியூயோர்க் நகரம் உலகில் இதுவரை கண்டு பிடிக்கப் படாத புதிய வகைத் தவளைகளுக்கும் பிரசித்தமான நகராக மாறி விட்டது.

நியூயோர்க்கின் லிபெர்ட்டி சுதந்திர தேவி சிலை மற்றும் துறைமுகத்துக்கு அண்மையில் மார்ஷெஸ் ஆஃப் ஸ்டாட்டென் தீவில் அத்திலாந்திக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த தனித்துவமான தவளை இனத்தை விஞ்ஞானிகளின் குழு கண்டு பிடித்துள்ளது.

சிறுத்தைத் தவளை எனப் பெயரிட்டுள்ள இத்தவளை இனம் விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்துவது ஏனென்றால் உலகில் மிகச் சனச் செறிவு மிக்க நகர்ப்புறங்களைக் கொண்டுள்ள நியூயோர்க்கில் கனெக்டிகுட்டில் இருந்து வடக்கு கரோலினா வரை வாழும் மிகுந்த கவர்ச்சியுடைய இத்தவளை வகை எவ்வாறு இதுவரை இனம் காணப் படவில்லை என்பதுதான்.

ஏற்கனவே 75 வருடங்களுக்கு முன்னர் ஸ்டேட்டென் தீவிலுள்ள மிருகக் காட்சி சாலையின் முன்னால் இயக்குனர் கார்ல் கௌஃப்பெட் என்பவர் 1937 ஆம் ஆண்டு இத்தவளை வகையை இனம் கண்டிருந்ததாக இவர் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மர்மமான முறையில் அன்றில் இருந்து இதுவரை இத்தவளையை கண்டு பிடிக்க முடியாத நிலை இருந்ததால் இவரின் கண்டுபிடிப்பு நிராகரிக்கப் பட்டிருந்தது.

ஸ்டீல், கிளாஸ் மற்றும் காங்ரீட் பள்ளத்தாக்குகள் பலவற்றைக் கொண்டுள்ள போதும் நியூயோர்க் நகரம் அதிசயிக்கத் தக்க உயிர்ப் பல்வகைமையைக் கொண்டுள்ளது. சென்ட்ரல் பார்க்கிலுள்ள 843 ஏக்கர் நிலப் பகுதியில் மட்டும் ரக்கூன் என்ற ஓநாயின் முகத்தைக் கொண்டுள்ள விலங்கினம், ஒப்பொஸ்ஸும் எனப்படும் வயிற்றில் தோலுடைய விலங்கு மற்றும் பல வகைப்பட்ட வலசை வரும் பறவைகள் மட்டுமன்றி அரிய வகை பூரான்களையும் கொண்டுள்ளது. இதைவிட நியூயோர்க் முழுதும் எண்ணிலடங்கா புறாக்களும் வசித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*