மியான்மாரில் ஆங் சான் சூச்சி அதிபராவதைத் தடுக்கும் அரசியல் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

மியான்மாரின் எதிர்க்கட்சித் தலைவியும் மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழியில் போராடி 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தவரும் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவருமான ஆங் சான் சூச்சி அடுத்த வருடம் நடைபெறவுள்ள முக்கிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் அந்நாட்டு அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை மாற்றியமைப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளதாக வெள்ளிக்கிழமை ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மியான்மாரின் அதிகார முறையின் முக்கிய பிரிவுகளை மாற்றி அமைப்பதற்கு ஆங் சான் சூச்சி பல வருடங்களாக தீவிர முயற்சி செய்து வருவதுடன் இவரின் NLD எனப்படும் தேசிய மக்களாட்சி கட்சி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் பட்சத்தில் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் இக்கட்சியே வெற்றி பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப் படுகின்றது. மியான்மார் கடந்த இரு தசாப்தங்களாக மோசமான இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்து வந்தது குறிப்பிட்டத்தக்கது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டு வருவது பற்றிய விவாதத்தை மேற்கொள்வது என்ற முடிவு முன்கண்டிராத விதத்தில் அதிபர் தெயின் செயின் மற்றும் ஆங் சான் சூச்சி உட்பட அவரின் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் முக்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆதிகாரிகள் இடையே கலந்துரையாடப் பட்டு எட்டப் பட்டுள்ளது. மியான்மார் தலைநகர் நேய்பைடாவில் நடந்த இச்சந்திப்பின் பின்னர் சட்டரீதியாக இவ்விவாதம் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப் பட சம்மதம் ஆகியிருப்பதாக அதிபரின் பேச்சாளர் யே ஹ்டுட் தெரிவித்துள்ளார்.

மியான்மாரில் 2008 ஆம் ஆண்டு முதல் அமுல் படுத்தப் பட்ட அரசியல் சட்டப் படி அந்நாட்டை ஆட்சி செய்யக் கூடியவரின் வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளைகள் வெளிநாட்டுக் குடியுரிமை உடையவர்கள் எனில் குறித்த நபர் அதிபராகப் போட்டியிட முடியாது என்ற நிலமை உள்ளது. இந்நிலையில் ஆங் சான் சூச்சியின் காலம் சென்ற கணவர் பிரிட்டிஷ் குடிமகன் என்பதுடன் அவரது இரு குழந்தைகளும் கூட பிரிட்டிஷ் குடியுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை மாற்றியமைப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற 75% வீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற வேண்டும் என்பதும் முக்கியமானது.

இதேவேளை அமெரிக்க அதிபர் ஒபாமா மியான்மாரின் அதிபர் தெயின் செயின் மற்றும் சூச்சி இருவருடனும் தேர்தல் பற்றி தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு அடுத்த நாள் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் பற்றிய குறித்த முக்கிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit