ஹிருணிக்கா பின்வாங்குகின்றாரா? – மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை விடுவிக்க திட்டம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி கூடிய விரைவிலேயே விடுவிக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டு வருவதாக தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு ஹிருணிக்கா கருத்து தெரிவிக்கையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான துமிந்த சில்வாவை நேற்றைய தினம் மட்டும் சுமார் 5 தடவைக்கு மேல் அவரது குடும்பத்தார் சந்தித்துள்ளனர்.

அவருக்கு மட்டும் விஷேட சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றதா என்ற சந்தேகம் தற்போது தனக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றினையும் நான் செய்துள்ளேன் என ஹிருணிக்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலையில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் துமிந்த சில்வா அனுமதிக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது வரையிலும் துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பில் கூறப்படுபவையும் முரண்பாடான கருத்துகளே. அதே வேளை அவர் மரண தண்டனை தொடர்பில் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ள விடயமும் அறிந்த ஒன்றே.

அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே துமிந்த சில்வாவிற்கு அனைத்து பாதுகாப்புகளையும் வழங்கியிருப்பாரோ என தனக்கு சந்தேகமாக இருப்பதாகவும் ஹிருணிக்கா கூறியிருந்தார்.

மேலும் ஆதாரம் இல்லாமல் நான் யாரையும் சுட்டிக்காட்ட முடியாது, சந்தேகமாகதான் உள்ளது இந்த சம்பவம் இடம் பெற்ற பிறகு கொலையாளிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து சந்தேகங்களும் தீர வேண்டுமாயின் குற்றப்புலனாய்வு பிரிவினர் புதிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஹிருணிக்கா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த குற்றச்சாட்டு மூலம் இவர் முன்வைக்க விரும்புவது எதனை? மீண்டும் விசாரணை இடம்பெற வேண்டும் என்றால் மீண்டும் மரணதண்டனையும் மீள் திருத்தப்படுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

அவ்வாறெனில் குறித்த வழக்கில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்த ஹிருணிக்கா முயன்று வருகின்றாரா? என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை கோத்தபாய அரசியலில் மீள் பிரவேசம் செய்து வரும் நிலையில் துமிந்த சில்வா மீதும் அவரது பார்வை திரும்பி உள்ளதா? அடிக்கடி சிறைச்சாலை பிரவேசங்கள் இடம்பெற்று வருகின்றமைக்கு காரணம் அவரா?

மறுபக்கம் முடிந்த வழக்கினை மீண்டும் ஹிருணிக்கா ஆரம்பிக்க முயல்கின்றது எதனால்? தனக்கு கிடைத்த வெற்றியாகவே துமிந்த சில்வாவிற்கு கிடைத்த தண்டனையை ஹிருணிக்கா அறிவித்திருந்தார்.

தற்போது ஹிருணிக்கா மீண்டும் மாற முயன்று வருவதற்கு பின்னணியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதா? அல்லது அரசியல் ரீதியான இலாபங்கள் இருக்கின்றதா என்ற வகையிலும் சந்தேகங்கள் தோன்றுவதாகவும் அவதானிகள் தெரிவத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*