ஈழப்போருக்கு ஏவுகணைகளை வாங்கிய குற்றச்சாட்டு – கனேடிய தமிழர்களின் தண்டனை அமெரிக்காவில் குறைப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25 வருட சிறைத்தண்டனை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு ஏவுகணை வாங்குவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் 25 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் நேற்றைய தினம் முன்னிலையான வழக்கறிஞர் ஒருவரின் வாதம் காரணமாக அவர்களது சிறைத்தண்டனை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தினால் 1977ஆம் ஆண்டு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு நியமிக்கப்பட்டது.

கனடாவைச் சேர்ந்த சதாஜ்ஜன் சரச்சந்திரன், சாஹிலால் சபாரத்னம், திருத்தணிகன் தனிகாசலம் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்ட பிரஜைகள் ஆவார்கள்.

எனவே குறித்த நபர்கள் தங்களது சிறைத்தண்டனை காலத்தை குறைக்குமாறு Brooklyn Federal நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களின் சிறை தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர்களை கனடாவிற்கு நாடு கடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் அடுத்த வாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த காலத்தில் இலங்கையில் தமிழீழ தாயக பகுதிகளில் இலங்கை அரச படைகளின் விமான தாக்குதல்களினால் பெருமளவிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்களை பலியெடுத்த அரச படைகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணைகளையே இவர்கள் வாங்க முயற்சித்திருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*