புலுனியைப் போல அல்லாடும் ஈழத்தமிழர் அவல வாழ்வு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்றைய நிலையில் எம் ஈழத்தமிழினம் தகுந்த தலைமை இல்லாமல், ‘நங்கூரமின்றி நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் போல’ தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

எங்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண அமைச்சர்களும் சரி, உறுப்பினர்களும் சரி, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, எம் இனத்தின் துயரை இதய சுத்தியுடன் துடைப்பதனை விட்டு விட்டு தங்களின் பதவிக் கதிரைகளைக் காப்பாற்றவும், தங்களின் குடும்பங்களை சொகுசாக வாழ வைக்கவுமே பெரும்பான்மை நேரத்தை செலவழித்து வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின் இன்று எமது இனம் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியுள்ள அவலத்தை ஜீரணிக்க முடியாதுள்ளது.

முள்ளிவாய்க்காலின் இறுதியிலாவது இந்தியா தலையிட்டு போரை நிறுத்தும் என கடைசி வரை நம்பி பொதிகைத் தொலைக்காட்சியை லொறி பற்றரியில் பார்த்து மாண்டவர்களே அதிகம்.

இறுதிப் போரை முடித்து வைக்க இந்திய அரசு தனது படைகளை அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல், தொழிநுட்ப உதவிகளை வழங்கி ஈழத் தமிழனின் தலையில் குண்டுகள் போடப்பட்டதனை வரலாறு என்றுமே மன்னிக்காது.

ஆனால், இன்றும் வன்னிப் பெருநிலப்பரப்பில் எந்த உதவியும் கிடைக்காமல், அங்கவீனமடைந்தும், கடும் நோய் வாய்ப்பட்டும், உடலில் குண்டுகளின் சிதறல்களை தாங்கியும் மிகவும் வறுமையான சூழலில் எம் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்க யாழில் இசைக் கச்சேரியை பிரமாண்டமாக நடத்துகிறது இந்தியா.

இப்படியான நிகழ்வுகள் ஒரு போதும் எம் மக்களின் அவலங்களுக்கு மருந்தாகாது. தவிர, இன்னும் அவர்களின் உளக் காயங்களைக் பன்மடங்கு அதிகரிக்கவே செய்யும்.

இந்தப் புலுனிப் பறவையைப் போல அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் எம் தமிழ் மக்களுக்கு எப்போது தான் விடிவு கிடைக்கும்.

கொடியில் சிக்குண்டிருந்த புலுனிக் குருவியை காப்பாற்றி நாம் விடுவித்த போது அது சுதந்திரமாக பறந்து சென்ற அழகே தனி அழகு தான்.

இதனைப் பார்க்கின்ற போது எம் தமிழினத்துக்கு எப்போது தான் விடுதலை என்கிற ஏக்கம் எம்மைச் சூழ்ந்து கொண்டது.

புலுனிக்கூட்டம் போலத் தான் ஈழத் தமிழர்களும் என்று சிங்களக் கிராமங்களில் இன்றும் பேசிக் கொள்வார்களாம்.

ஏழு புலுனிக் குருவிகள் (Seven Sisters) எப்போதும் கூட்டமாக கூடி கீச் கீச் என்று கத்துவதனைப் போல, ஈழத் தமிழர்களும் கூடிக்கதைத்து விட்டு கலைந்து போய் விடுவார்கள். ஆனால் அதில் எந்தப் பிரயோசனமும் இருக்காது. கூடிப் பேசியதோடு எல்லாம் முடிந்து விடும். அடுத்து அதில் எந்த விளைவுகளோ அடைவுகளோ இருக்காது என்று சொல்வார்களாம்.

இனியும் எம்மினம் இந்தக் கிண்டல்களுக்கு ஆளாகக் கூடாது என்பதே நமது விருப்பம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*