ஆம்புலன்ஸ் வந்தால் பச்சை சிக்னல் தானாகவே மாறும்: பெங்களூருவில் புதிய தொழில்நுட்பம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ambulance

அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வரும்போது தானாகவே சிகப்பு சிக்னல் பச்சையாக மாறும் வகையிலான தொழில்நுட்பம் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆம்புலன்சுக்காவது வழிவிடுங்கள் இதனால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட குறிப்பிட்ட நேரத்துக்கு போக வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் சைரனை அலற விடுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை பார்த்ததும் தானாகவே சிக்னல்கள் பச்சை நிறமாக மாறும் வகையில் இந்த தொழில்நுட்பம் பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது.

நகரிலுள்ள முக்கியமான சாலை பகுதிகளில் மொத்தம் 353 சிக்னல்களில் ரூ. 75 கோடி செலவில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த கருவிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களின் மேல் சுழலும் விளக்கை அடையாளம் கண்டு, அந்த பாதையை போக்குவரத்திற்கு திறக்கும் வகையில் பச்சை சிக்னலாக மாறும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல முன்னேறிய நாடுகளில் இதுபோன்ற நடைமுறை இருந்தாலும், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில்ல் சிக்னல் சென்சார் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. விஐபிகள் வாகனங்கள் சென்றாலும் கூட ஆம்புலன்ஸ் செல்லும் ரூட்டைத்தான் கிளியர் செய்துவிடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit