யோஷிதவுக்காக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள்

பிறப்பு : - இறப்பு :

யோஷித ராஜபக்ச வெளிநாட்டில் வசிக்கும் காலப்பகுதியில் அவருக்கு எதிராக கல்கிசை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகுவதற்கு, கல்கிசை நீதவான் சஹாப்தீன் சட்டதரணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 8ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் இவ்வாறு சட்டத்தரணிகள் ஆஜராகுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்கிசை, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள காணி ஒன்றை 521 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளதாக யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி பொரஸ்ட் என்பவருக்கு எதிராக கொழும்பு நிதி மோசடி விசாரணை பிரிவு கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அந்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் தான் வெளிநாட்டில் இருப்பதனால் தனக்கு பதிலாக சட்டத்தரணிகள் ஆஜராகுவதற்கு அனுமதி வழங்குமாறு மனு ஒன்றின் ஊடாக யோஷித ராஜபக்ச நீதிமன்றில் கோரியிருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான், யோஷித ராஜபக்சவுக்காக அவரது சட்டத்தரணிகள் ஆஜராகுவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit