மலையகத்தில் அடுத்த அபாயம்! கல் ஒன்று விழும் ஆபத்து…(Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ தோட்டப் பகுதியில் 55ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேரை தோட்ட ஆலயத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவித்தார்.

குறித்த தோட்டப் பகுதிக்கு மேலே மலைப் பகுதியில் ஒரு பாரிய கல் ஒன்று கீழே விழும் அபாயத்தில் இருப்பதனால் இதனை அறிந்த தோட்ட தொழிலாளிகள்,தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து, தோட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்கு அமைய குறித்த பிரதேச மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மக்களுக்கு அத்தியவசிய பொருட்களையும் உணவு வகைகளையும் நிவாரண உதவிகளையும் வழங்க தோட்ட நிர்வாகமும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளிகளை பிரதி அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கிணங்க மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறிதரன் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு பிரச்சினைகளை கேட்டறிந்தார்.டு பேர் பலி

பலாங்கொடையில் சற்று முன்னர் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பலாங்கொடை, ஒலுகன்தொட்டை, சமன்புர பகுதியில் இருந்த வீடொன்று மண்சரிவிற்குள் அகப்பட்டுக் கொண்டதில் குறித்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

பிரதேச மருத்துவர் ஒருவரின் வீட்டில் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் மண்சரிவிற்குள் சிக்கியுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் 45 மற்றும் 55 வயதுடையவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*