புர்கினா ஃபசோ அதிபர் பதவி விலகல்!:அதிகாரம் இராணுவத்தின் கைவசம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

blasie

17 மில்லியன் மக்களைக் கொண்ட மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபசோவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக அங்கு சுமார் 27 வருடங்களாக அதிபராக விளங்கிய பிளைசே கொம்போரே 5 ஆவது தடவையாகவும் அதிபராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் தான் பதவி விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த அதிபர்களில் ஒருவரான கொம்போரே பொது மக்களின் எதிர்ப்பு போராட்டம் மற்றும் எதிரணியினரின் அழுத்தம் காரணமாகப் பதவி விலகுவதைத் தேசிய தொலைக் காட்சிச் சேவையில் நேரடியாகவே அறிவித்தார். இதனை அடுத்து துணை சஹாரா ஆப்பிரிக்க தேசத்தில் வெற்றியடைந்த முதல் மக்கள் புரட்சியாகவும் புர்கினா ஃபசோ மக்கள் போராட்டம் மாறியுள்ளது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டுத் தீ முட்டிய புர்கினா ஃபசோ மக்கள் தேசிய தொலைக்காட்சியின் தலைமையகத்தையும் தாக்கி சேதப் படுத்தியதுடன் தலைநகரிலுள்ள ஏனைய அரச அலுவலகங்கள் சிலவற்றையும் முற்றுகையிட்டிருந்தனர். மேலும் இன்று வெள்ளிக்கிழமை 10 000 பொதுமக்கள் வரை ஒன்று கூடியிருந்ததுடன் அதிபரின் முடிவை அடுத்து மகிழ்ச்சியுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர். இதேவேளை புர்கினா ஃபசோவில் அதிபரின் பதவி விலகல் அறிவிப்பை அடுத்து அதிகாரம் அந்நாட்டு இராணுவத் தளபதியான ஜெனரல் ஹொனொரே நபெரெ ட்ரவொரே கைவசம் சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஜெனரல் ஹொனொரே வெள்ளிக்கிழமை ஊடகப் பேட்டியின் போது தான் அதிபரது கடமைகளைத் தற்காலிகமாகப் பொறுப்பேற்றிருப்பதாகவும் தமது நாட்டை முறையான அரசியல் மாற்றம் மற்றும் தேர்தல்களினூடு கொண்டு நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் ஓர் நிரந்தர அரசியல் மாற்றம் வரும் வரைக்கும் நாட்டில் மக்கள் அமைதி காக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜெனரல் தனது டுவிட்டரினூடு இன்னமும் 90 நாட்களுக்குள் புர்கினா ஃபசோவில் சுதந்திரத் தேர்தல் நடக்கும் என வாக்குறுதியும் அளித்துள்ளார்.

மறுபுறம் புர்கினா ஃபசோவை முன்னால் தனது காலனியாக ஆண்ட பிரான்ஸ் அரசு அதிபர் கொம்போரே இன் பதவி விலகல் முடிவை வரவேற்றுள்ளதுடன் அந்நாடில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit