சிரியாவில் இராணுவ ஹெலிகாப்டர் அகதிகள் முகாமில் குண்டு வீசியதில் 75 பேர் பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிரியாவின் வடக்கு இட்லிப் மாகாணத்திலுள்ள அகதி முகாம் ஒன்றின் மீது புதன்கிழமை இராணுவ ஹெலிகாப்டர் மூலம் இரு பரெல் குண்டுகள் வீசப்பட்டதில் பல பெண்களும் குழந்தைகளும் உட்பட 75 அப்பாவி மக்கள் உடல் சிதறிப் பலியாகியுள்ளதாக இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இக்குண்டுத் தாக்குதலில் இறந்த மக்களது சடலங்களும் காயம் அடைந்தவர்களைக் காப்பாற்ற பொது மக்கள் போராடுவதும் வீடியோ எடுக்கப் பட்டு YouTube இல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத்தினரின் இக்குண்டுத் தாக்குதல் குறித்து சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிடாத போதும் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தாக்குதலில் 10 பொது மக்கள் கொல்லப் பட்டதாகத் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டமாகத் தொடங்கி உள்நாட்டுப் போராக பரிணமித்த குழப்பத்தில் இதுவரை 10 மில்லியன் பொது மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 3 மில்லியன் சிரிய மக்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன் 200 000 பேர் வரை கொல்லப் பட்டிருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு அப்பாவி மக்கள் அதிகளவில் கொல்லப் பட்டு வருவதற்கு அரசு மற்றும் போராளிக் குழுக்கள் என்ற இரு தரப்பையுமே மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதேவேளை ஈராக்கிலும் சிரியாவிலும் தாம் கைப்பற்றி வரும் பகுதிகளை இணைத்து தற்போது இஸ்லாமிய தேசம் என்ற மாநிலத்தை உருவாக்கும் நோக்கத்தில் போராடி வரும் ISIS அமைப்பில் சேர குறைந்தது 80 நாடுகளில் இருந்து வெளிநாட்டு ஜிஹாதிஸ்ட்டுக்கள் சென்றிருப்பதாக ஐ.நா அறிக்கையை சுட்டிக் காடி பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை குறைந்தது 15 000 பொது மக்கள் IS மற்றும் ஏனைய ஜிஹாதிஸ்ட் குழுக்களில் சேர வெளிநாடுகளில் இருந்து சென்றிருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வாரத்துக்கு 5 பேர் ஜிஹாதிஸ்ட்டுக்களுடன் சேர சென்று வருவதாகவும் தற்போது சிரியாவிலும் ஈராக்கிலும் சுமார் 500 பிரிட்டிஷ் பிரஜைகள் ISIS இற்காகப் போராடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் IS அமைப்பில் சேர செல்பவர்கள் அல்லது அதற்கு உதவுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் முடுக்கி விடப் பட்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*