கத்தி சூப்பர் ஹிட் : ஆமாம்… ஆமாம்… தியேட்டர்காரங்களே சொல்லியாச்சு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஒரு வழியாக கத்தி திரைக்கு வந்துவிட்டது. முதல் நாள் கலெக்ஷனே 23,80 கோடி ரூபாய் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து ஆனந்தப்பட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதெல்லாம் உண்மைதானா? அல்லது உட்டாலக்கடியா? தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் பேசினோம். இதிலென்ன சந்தேகம் என்றபடி பேச ஆரம்பித்தார் ஸ்ரீதர்.

‘நிஜத்திலேயே கத்தி மாபெரும் ஹிட். அதுவும் விஜய் பாலிவுட்டின் ஹன்ரட் குரோர் கிளப்பில் இணைகிற அளவுக்கு. இதற்கு முன்பு வெளிவந்த அவரது துப்பாக்கி பட கலெக்ஷனை அவரே முறியடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, நான்கு நாட்கள் கலெக்ஷன் மட்டும் 70 கோடியை தாண்டிவிட்டது. சேட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமம், இதர மொழி உரிமை என்று சேர்ந்து இந்த நான்கு நாட்களிலேயே கத்தி 100 கோடியை எட்டிவிட்டது என்பதுதான் உண்மை’ என்றார் அவர். ‘தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் என்று எல்லா தரப்பும் இந்த தீபாவளியை விஜய் தீபாவளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எல்லார் சார்பிலும் விஜய்க்கு நன்றி’ என்றார் ஸ்ரீதர்.

படம் வெளியீட்டின் போது திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த சில பிரமுகர்களே, ‘கத்தி வர வேண்டாம்’ என்று கேம் ஆடினார்களாமே, உண்மையா? என்ற கேள்விக்கு மிக அழுத்தம் திருத்தமாக பதிலளித்தார் அவர். ‘சார்… யாராவது தேடி வர்ற ஸ்ரீதேவியை வேண்டாம்னு சொல்வாங்களா? விஜய் படம் வெளியாகிறது என்றாலே தியேட்டர்காரர்களுக்கு கல்லா நிரம்புகிறது என்று அர்த்தம். யாரும் கத்திக்கு எதிராக இல்லை. அது பொய்’ என்றார். அடிஷனல் செய்தி- இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் விஜய்யின் பைபர் சிலை ஒன்றை உருவாக்கி குரோம்பேட்டை தியேட்டர் வளாகத்தில் வைத்திருக்கிறார்கள். இது அவரது ரசிகர்களின் ஏற்பாடு.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit