மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

பிறப்பு : - இறப்பு :

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸாருக்கு எதிராக அண்மையில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவினால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்களில் ஈடுபடுகின்ற போது பொலிஸாரின் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தனது முறைப்பாட்டில் முன்வைத்திருந்தார்.

குறித்த முறைப்பாடு இன்று வியாழக்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த விசாரணைகளுக்காகவே பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பாளராக கடமைபுரியும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit