எழுக தமிழ் யாரை நோக்கி??????

பிறப்பு : - இறப்பு :

எழுக தமிழ் பேர­ணிக்­கான முன்­னா­யத்­தங்கள் யாழ்ப்­பா­ணத்தில் நடந்து கொண்­டி­ருந்த போது, நியூ­யோர்க்கில் நடந்து கொண்­டி­ருந்த ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில், இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச தலை­வர்கள் வாழ்த்­துக்­களைப் பரி­மாறிக் கொண்­டி­ருந்­தார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பங்­கேற்­றி­ருந்த இந்த மாநாட்டில், உரை­யாற்­றிய ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் இலங்­கையில் போருக்குப் பிந்­திய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அது­போ­லவே, இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் நிலை­மா­று­கால செயல்­மு­றைகள் உல­கிற்கு முன்­னு­தா­ர­ண­மாக இருப்­ப­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவும் பாராட்டுத் தெரி­வித்­தி­ருந்தார்.

நியூ­யோர்க்கில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளை­யிட்டு தம்மைச் சந்­தித்த வெளி­நாட்டுத் தலை­வர்கள் திருப்­தியும் பாராட்டும் தெரி­வித்­த­தாகக் கூறி­யி­ருந்தார்.
இந்தப் பாராட்­டு­களில் அர­சாங்கம் நனைந்து கொண்­டி­ருந்த போது தான், வடக்கில் எழுக தமிழ் நிகழ்வு நடந்­தே­றி­யி­ருக்­கி­றது. இந்தப் பத்தி எழு­தப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் போது, எழுக தமிழ் நிகழ்வு இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

ஆனால் அச்சில் வெளி­யாகும் போது, நிகழ்வு நடந்­தே­றி­யி­ருக்கும்.
இந்த நிகழ்வைப் பிர­மாண்­ட­மான ஒன்­றாக நடத்த வேண்டும் என்­பதே தமிழ் மக்கள் பேர­வையின் ஆவ­லாக இருந்­தது. கிட்­டத்­தட்ட பொங்கு தமிழ் நிகழ்­வுக்கு இணை­யாக இதனை நடத்த வேண்டும் என்று ஏற்­பாட்­டா­ளர்கள் தரப்பில் முன்­னரே கூறப்­பட்­டி­ருந்­தது. அதனால் தான், இதன் பெயரும் எழுக தமிழ் என்று வைக்­கப்­பட்­ட­தாகத் தெரி­கி­றது.

தமிழர் தாயகப் பகு­தி­களில் பௌத்த மய­மாக்­க­லையும், சிங்­களக் குடி­யேற்­றங்­களைத் தடுத்து நிறுத்­து­மாறு கோரியும், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் உள்ள பொது­மக்­களின் காணி­களை மீள ஒப்­ப­டைக்க வலி­யு­றுத்­தியும், படைக்­கு­றைப்பை வலி­யு­றுத்­தியும், காணா­மற்­போனோர் மற்றும் மீறல்கள் குறித்து சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்தக் கோரியும், இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண வலி­யு­றுத்­தி­யுமே இந்த எழுக தமிழ் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இந்த நிகழ்­வுக்கு தமி­ழ­ரசுக் கட்­சியின் ஒத்­து­ழைப்பைப் பெறு­வ­தற்கு ஏற்­பாட்­டா­ளர்கள் தரப்பில் சில நாட்­க­ளுக்கு முன்­ன­தாக நடத்­தப்­பட்ட பேச்­சுக்கள் தோல்­வியில் முடிந்­தி­ருந்­தன. இத்­த­கைய தரு­ணத்தில் இப்­ப­டி­யொரு போராட்­டத்தை நடத்­து­வது, அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்­கான முயற்­சி­களை பாழ­டித்துவிடும் என்றும், தென்­னி­லங்­கையில் சிங்­களத் தேசி­ய­வா­தி­களை உசுப்­பேற்றி விடும் என்றும் கூறி தமி­ழ­ரசுக் கட்சி இந்த நிகழ்­வுக்கு ஆத­ரவு வழங்­காமல் நழுவிக் கொண்­டது.

ஏற்­பாட்­டா­ளர்­களைப் பொறுத்­த­வ­ரையில், தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆத­ரவைப் பெற வேண்டும் என்ற உண்­மை­யான எண்ணம் அவர்­க­ளுக்கு இருந்­ததா? என்று தெரி­ய­வில்லை. ஏனென்றால், தமிழ் மக்கள் பேர­வைக்கும் தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் இடையில் பகி­ரங்­க­மா­கவே பல சம­யங்­களில் பனிப்போர் நடந்­தி­ருக்­கி­றது.

தமிழர் தரப்பில் ஒன்­று­பட்டு இது­போன்ற போராட்­டங்­களை நடத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டதைக் கருத்தில் கொண்டு தான், ஏற்­பாட்­டா­ளர்கள் தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆத­ரவைக் கோரி­யி­ருந்­தனர்.

எதிர்­பார்க்­கப்­பட்­டது போலவே, தமி­ழ­ரசுக் கட்­சியும், ஏதோ சாட்­டு­களைச் சொல்லி எழுக தமிழ் நிகழ்வில் இருந்து விலகிக் கொண்­டது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆத­ரவைப் பெற்று விட்டால் மாத்­தி­ரமே எழுக தமிழ் நிகழ்வு பெரிய வெற்­றியைத் தந்து விடும் என்று கூற முடி­யாது. ஏனென்றால், தமி­ழ­ரசுக் கட்சி வாக்கு வங்­கியைக் கொண்ட கட்­சி­யாக இருந்­தாலும், அது மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு கட்சி அல்ல.

இது­போன்ற போராட்­டங்­க­ளுக்கு பெரி­ய­ளவில் மக்­களைத் திரட்டும் சக்தி தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் கிடை­யாது, வடக்­கி­லுள்ள வேறு எந்த தமிழ்க் கட்­சிக்கும் கிடை­யாது என்­பது கசப்­பான உண்மை. அதனால் தான், எல்லாக் கட்­சி­க­ளையும் ஒருங்­கி­ணைத்துப் போராட்டம் நடத்­தப்­பட வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­பட்­டது.

எழுக தமிழ் நிகழ்வு பெரி­ய­ளவில் வெற்றி பெற்றால், அது தமி­ழ­ரசுக் கட்­சிக்கு சவா­லான விட­ய­மா­கவே இருக்கும்.

தமிழ் மக்கள் பேரவை நேர­டி­யாக இல்­லா­விட்­டாலும், அதி­லி­ருக்கும் கட்­சி­களும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் முட்டி மோது­கின்ற கட்­சி­களும் அந்த வெற்­றியை, வேறு வித­மா­கவே திருப்­பு­வ­தற்கு முனை­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அதே­வேளை, எழுக தமிழ் நிகழ்வு யாருக்கு அழுத்­தங்­களைக் கொடுக்கப் போகி­றது, எத்­த­கைய அழுத்­தங்­களைக் கொடுக்கப் போகி­றது என்­பதில் குழப்­பங்கள் உள்­ளன.

அதா­வது, தமிழ் மக்கள் இன்­னமும் பிரச்­சி­னை­க­ளுடன் தான் வாழ்­கி­றார்கள் என்ற செய்­தியை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு எடுத்துச் செல்லப் போகி­றதா?
அல்­லது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை அர­சாங்­கத்­துக்கு எடுத்துச் செல்லப் போகி­றதா?

சர்­வ­தேச சமூ­கத்­துக்கும், அர­சாங்­கத்­துக்கும் இந்த பிரச்­சி­னைகள் தொடர்­பாக தமிழ் மக்கள் தரப்பில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விளக்கிக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், இதனைச் செய்­தி­ருக்­கி­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும் இதனைச் செய்­தி­ருக்­கிறார். தமிழ் மக்கள் பேர­வையும் இதனைச் செய்­தி­ருக்­கி­றது.

அர­சாங்­கமோ, தனது நிகழ்ச்சி நிரல்­களை விட்டு வெளியே வந்து, இந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு தயா­ராக இல்லை. எனினும், சர்­வ­தேச சமூகம், எல்லாப் பிரச்­சி­னை­க­ளையும் கேட்­கி­றது. அர­சாங்­கத்­துக்கும் ஆலோ­ச­னை­களைக் கூறு­கி­றது. ஆனால் கடை­சியில் சர்­வ­தேச அரங்­கிற்குப் போனதும், தனது தொனியை மாற்றிக் கொள்­கி­றது.

ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன், இந்த மாத முதல் வாரத்தில் யாழ்ப்­பாணம் வந்­தி­ருந்தார். பெரு­ம­ளவு மக்­களின் அகதி வாழ்­வுக்கு கார­ண­மான வலி.வடக்­கிற்கும் சென்­றி­ருந்தார். மக்­களின் பிரச்­சி­னை­களை நேரில் சென்றும் பார்­வை­யிட்­டி­ருந்தார். ஆனாலும், அவர் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் பாராட்­டி­யி­ருக்­கிறார்.
அவரோ அல்­லது வேறு எந்த நாடு­களின் தலை­வர்­களோ, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீருங்கள் என்று ஐ.நா. பொதுச்­ச­பையில் ஒரு வார்த்­தை­யேனும் கூற­வில்லை. நல்­லி­ணக்கம் என்ற பெரி­ய­தொரு விட­யப்­ப­ரப்­புக்குள் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் அனைத்தும் சுருக்­கப்­பட்டு விட்­டன.

அவ்­வா­றாயின், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு இது­வரை தமி­ழர்கள் தமது பிரச்­சி­னைகள் தொடர்­பாக எடுத்துக் கூறி­வந்த முறை தவ­றா­னதா அல்­லது, சர்­வ­தேச சமூ­கத்தை தமி­ழர்­களின் பக்கம் திருப்­பு­வ­தற்குத் தவறி விட்­டோமா?
எழுக தமிழ் நிகழ்வில் ஏற்­பாட்­டா­ளர்­களும், முத­ல­மைச்­சரும் வெளி­யிட்ட அறிக்­கை­களில், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை உல­கிற்கு எடுத்துக் கூறுவோம் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

எழுக தமிழ் போன்ற நிகழ்­வுகள் பிர­மாண்­ட­மான வெற்­றியைப் பெறு­கின்ற வாய்ப்புத் தொடர்­பான இந்தப் பத்தி எழு­தப்­ப­டு­கின்ற போது நிறை­யவே சந்­தே­கங்கள் இருந்­தன.

ஏனென்றால், இது­போன்ற போராட்­டங்கள், எழுச்­சிகள் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அவ்­வாறு இந்த நிகழ்வு பெரி­ய­ள­வுக்கு மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, இதனை மக்கள் மயப்­ப­டுத்­து­வ­தற்­கான பிர­சா­ரங்கள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

தமிழர் தரப்பு இன்­னமும் தென்­னிந்­திய சினிமா நாய­கர்­களின் மாயை­களில் இருந்து விடு­ப­ட­வில்லை என்­பதை, எழுக தமிழ் நிகழ்வும் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கி­றது.

இந்த நிகழ்வில் பங்­கேற்­கு­மாறு அறை­கூவல் விடுத்து தமி­ழ­கத்தில் இருந்து பலரும் அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருந்­தார்கள். இது­போன்ற அழைப்­புகள் அறிக்­கை­களை அவர்கள், ஜெனீவா போன்ற மேற்கு நாடு­களில் நடக்­கின்ற ஈழத் தமி­ழர்­களின் பேர­ணி­க­ளுக்குத் தான் வெளி­யி­டு­வது வழக்கம்.
வெளி­நா­டு­களில் வாழு­கின்ற தமி­ழர்­களை உசுப்­பேற்­று­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட அதே அறிக்­கைகள் இப்­போது, தாய­கத்தில் வாழும் மக்­களை உசுப்­பேற்­றவும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இங்கு வாழ்ந்து கொண்­டி­ருக்கும் மக்­க­ளுக்கு, அவர்­களின் பிரச்­சி­னையை சொல்­வ­தற்கு தென்­னிந்­திய நட்­சத்­தி­ரங்­களோ பிர­ப­லங்­களோ தேவை­யில்லை. உங்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக போரா­டுங்கள் என்று வெளியில் இருந்து கொண்டு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அவ்வாறு சொல்லப்பட்டால் அதற்குப் பெயர் திணிப்பு. போராட்டங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று தார்மீக ஆதரவை யாரும் எங்கேயும் இருந்தும் கொடுக்கலாம். ஆனால், போராடக் கிளம்புங்கள் என்று உந்துதல் கொடுக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு தமிழகத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டமை இயல்பானதொன்றாகத் தெரியவில்லை.
2000ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வு இவ்வாறான அழைப்புகள் விடப்பட்டுத் தான் நடத்தப்பட்ட ஒன்றல்ல. அது தானாகவே முகிழ்ந்து வெடித்த ஒரு எழுச்சி.

அதுபோன்ற ஒன்றைத் தான் எழுக தமிழ் போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்த வேண்டும். அதுவே அரசாங்கத்தையும், சர்வதேச சமூகத்தையும் தானாகவே திரும்பிப் பார்க்க வைக்கும்.

கபில்
வீரகேசரி

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit