உங்களுக்கு எங்க மச்சம் இருக்கு? மச்சங்களும் அதற்கான பலன்களும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நம் உடம்பில் மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து அதிர்ஷ்டமா இல்லையா என சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.

விஞ்ஞான ரீதியில் நம் உடம்பில் ஏற்படும் மச்சத்திற்கான பலன்கள் குறித்து இன்னும் தீர்வுகள் காணவில்லை.

ஆனால் ஜோதிடத்தில் நமது உடம்பில் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மச்சத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கைக்கான பலன்களை கூறுகின்றனர்.

தலையில் மச்சம்

தலையில் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்களிடம் பேராசை மற்றும் பொறாமை குணம் நிறைய இருக்கும்.

மேலும் அந்த பெண்களின் வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் மன நிறைவு இருக்காது என்று ஜோதிடப் பலன்களில் கூறுகின்றனர்.

நெற்றியில் மச்சம்

நெற்றியின் நடுவில் மச்சம் அல்லது இரு புருவத்துக்கு இடையே மச்சம் இருந்தால், அவள் அதிகாரமிக்க பதவியில் அமர்வாள். அவள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைத்து, ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.

மேலும் நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும், நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும்.

சந்தோசமான வாழ்க்கை இருக்கும். இதுவே வலதுபக்கம் இருந்தால், வறுமைகள் வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணம் கொண்டவளாக இருப்பார்கள்.

வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவார்கள் என்றும் அர்த்தமாகும்.

கண்களில் மச்சம்

பெண்களின் கண்களில் மச்சம் இருந்தால், அவ்ர்களின் வாழ்க்கை ஏற்றம் மற்றும் இறக்கம் குணங்கள் நிறைந்ததாக இருக்கும்.

மூக்கில் மச்சம்

பெண்களின் மூக்கில் மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம் ஆகும். இதனால் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு மற்றும் சமூக மதிப்புகள் கிடைக்கும்.

காதுகளில் மச்சம்

பெண்களின் காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள்.

மேலும் எவ்வளவு செலவுகள் செய்தாலும் அதற்குத் வருமானமும், பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு உடையவர்களாக இருப்பார்கள்.

நாக்கில் மச்சம்

நாக்கில் மச்சம் இருந்தால், அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் மச்சம்

கழுத்தில் மச்சம் இருந்தால், அவர்களின் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடங்கள் கிடைக்கும்.

மார்பில் மச்சம்

பெண்களின் வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள்.

பெண்களின் இடது பக்க மார்பில் மச்சம் இருந்தால், உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

வயிற்றில் மச்சம்

பெண்களின் தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை கிடைக்கும்.

தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்

கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலாக இருப்பார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கை வசதியாகவும் இருக்கும்.

கைகளில் மச்சம்

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலைரசனை உடைய பெண் மற்றும் சிறந்த நிர்வாகியாக விளங்குவார்கள்.

தொடையில் மச்சம்

இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.

வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காத குணமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பார்கள் என்று ஜோதிட பலன்கள் கூறுகின்றது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*