எழுக தமிழ்!! இது கட்சிகளுக்கான பலப்பரீட்சை அல்ல!! அநீதிக்கெதிரான மக்கள் போராட்டம் அனைவரும் வாரீர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எழுகதமிழ் இன்றய காலகட்டத்தில் தமிழ்மக்களைப்பெறுத்தவரைக்கும் காலத்தின் கட்டாயமான ஒன்று எனவே அதனை வெற்றிபெறச்செய்யவேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் மக்களையுமே சாரும் இந்த உலகத்தில் எத்தனையோ இனங்கள் வராலற்றிலே பாரிய மாற்றத்தினையும் ஒரு புரட்சியினையும் ஏற்படுத்தியுள்ளனர் எத்தனையோ அணுகுண்டுகளைத்தாங்கிய நாடுகள் கூட இன்ற்றூலகின் முதல்தரத்தில் வளர்ச்சியடைந்துள்ளது இது எவ்வாறு இதற்காக உழைத்தவர்கள் யார் ?

போராடியவர்கள் யார் நிச்சயமாக நாட்டின் குடுமக்களே !போராடாத எந்த ஒரு இனமும் விடுதலை அடைந்த்தாக சரித்திரம் இல்லை எனவே தமது விடிவுக்காக போராடவேண்டிய முழுப்பொறுப்பும் நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு .இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் காலத்துக்குக்காலம் பலதரப்பட்டபோராட்டங்களைச்சந்தித்து பல இழப்புக்களையும் இன்னல்களையும் சந்தித்து இதுவரை எதைப்பெற்றுக்கொண்டோம் என்று சில அதிமேதாபிகள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி தமிழர்களின் இன விடுதலைப்போராட்டத்துக்கான வேகத்தடைகளை உண்டுபண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களது நோக்கம் வேறு முற்றிலும் வியாபார அரசியலுக்குள் மூழ்கிப்போன அவர்களின் உன்மையான அக்கறை இந்த நீட்டின்மீதோ நாட்டின் குடிமக்கள்மீதோ அல்ல தமது வீட்டின் மீதும் தாம் பெற்ற மக்களின்மீதுமே ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அயோக்கியர்கள் என்றால் தேர்ந்தெடுத்தவர்கள் முட்டாள்கள் என்றே அர்த்தம் எனவே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் முட்டாள்கள் என்ற பட்ட்த்துக்து செவி சாய்த்துக்கொள்ளவேண்டும் அவர்களின் முட்டாள்த்தனம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும் அவர்களுக்கு,

சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றமுடியாது எனவே தமிழினம் தெளிவுபெறவேண்டிய காலம் இதுவே இதன் அடிப்படையின் இந்த எழுக தமிழ் பேரணி என்பது தமிழர்கள் தமது முட்டாள்த்தங்களின் இருந்து விடுபட்டு போராடவதற்கான ஒரு திறவுகோலே ஆகும்,

எனவே இந்த சந்தர்ப்பத்த தமிழர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டு தமது பயணத்தை மீண்டும் ஒற்றுமையாக தொடரவேண்டும் இங்கே விமர்சன்ங்கள் வேண்டாம் ஆனாலும் ஒருவிடயத்தினை இங்கே தெளிவுபடுத்தவேண்டும் எழுகதமிழ் பேரணிக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது ஆதரவினைக்கொடுக்க மறுப்பதோடு அந்த பேரணிக்கு எதிரான சில வேலைகளை நாசுக்காக திரைமறைவில் நின்று செய்துகொண்டிருக்கின்றது என்பது உன்மை ஒருவேளை இந்த பேரனியினை தமிழ்மக்கள் பேரவை ஒழுங்குசெய்தமையினால் இது வெற்றிகாணும்போது தமிழ்மக்கள் பேரவைக்கான ஆதரவு மக்கள் மத்தியிலே பலம் பெறும் இது சிலரது அரசியல் பிளைப்புக்கு பாதிப்புக்களை உண்டு பன்னும் எனவே இதனை தோல்விகாணச்செய்யவேண்டும் எனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கவில்லை என்றாலே இங்கே தமிழ்த்தேசியவாதிகளின் ஆதரவும் வருகையும் குன்றிவிடும் எனவேதான் இவர்கள் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவினைக்கொடுக்கவில்லையா?

அல்லது இலங்கை அரசாங்கத்துக்கெதிராக தமிழர்கள் ஒன்றுதிரண்டு பேரணியாக போராடும்போது அதற்கு ஆதரவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டால் அது மத்திய அரசினை ஆத்தரமுறச்செய்யும் இலங்கை அரசின் தீவிர விசுவசிகளாக தம்மைக்காட்டிக்கொள்ள விரும்பும் ஒரு சில தலமைகளின் நோக்கம் தோல்வியடைந்துவிடும் எனவே எழுக தமிழ் பேரணிக்கான தமது ஆதரவினைக்கொடுக்காமல் எதிர்ப்பினை தெரிவிப்பதன்மூலம் தமது எஜமாங்களுக்கு விசுவாசிகளாக தம்மை காட்டிக்கொள்ளலாம் எனவேதான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவினைக்கொடுக்கவில்லையா? இதற்கான பதிலை அவர்கள்தான் கூறவேண்டும்

உரிமை என்பதும் அதிகாரம் என்பதும் தங்கத்தட்டிலே வைத்து கொடுக்கப்படுவது அல்ல மாறாக அது இரந்து யாசகமாகப்பெற்றுக்கொள்வதும் அல்ல அதைப்போராடியே பெற்றுக்கொள்ளவேண்டும் அப்படியான போராடங்களை மக்கள் தாமாகவே முன்னெடுக்கும்போது அதற்காக தமது ஆதரவினைக்கொடுத்து வலுச்சேர்க்கவேண்டிய தலைவர்கள் அதற்கெதிராகச்செயற்படுவது அவர்களை தேர்வுசெய்த மக்களுக்குச்செய்யும் துரோகமாகவே அமையும் எனவே இன்று யார் துரோகிகள் என்பதை இன்றைய காலம் நன்கு தெளிவுபடுத்தும்,

எழுக தமிழா என்பது தமிழ்மக்கள் பேரவைக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே ஒருபலப்பரீட்சையாக சில தலமைகள் நோக்குகின்றன என்பது துலங்கிக்கொண்டிருக்கின்றது எது எப்படியோ எழுகதமிழ் பேரணி வெற்றிபெறச்செய்யவேண்டிய முழு பொறுப்பும் கடமையும் தமிழ்மக்களையே சாரும் இதனை ஒவ்வொரு தமிழனும் தமிழிச்சியும் புரிந்துகொள்ள்வேண்டும் உலகிலே மக்கள் புரட்சிக்கு நிகராக எந்த ஒரு ஆயுதமும்,

இல்லை அணு ஆயுதங்களையும் விட சக்திமிக்கது இந்த மக்கள் புரட்சி என்பது இந்தகைய மக்கள் புரட்சிகள் மக்காளால் உருவாக்கப்படும்போது அதை ஆதரித்து பலம் சேர்ப்பதே நல்ல தலைவர்களுக்கு உகந்தது எழுக தமிழ் பேரணியினை ஆதரிக்காத தலமைகள் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதை விரும்பவில்லை என்பது நிதர்சனம் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதை விரும்பாதவர்கள் நல்ல தலைவர்கள் அல்ல இதனை தமிழ்மக்கள் ஆழமாக பதிவுசெய்யவேண்டும் காலம் வரும்போது அவர்களுக்கான தீர்ப்பினை தமிழர்களே எழுதலாம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கவில்லை என்பதற்காக தமிழ்த்தேசியவாதிகள் இன்றைய இளைய சமுதாயத்தினர் எவரும் தமது பங்களிப்புக்களை தர மறுப்பது அநீதியாகும் அநீதிக்கெதிராக போராட மறுப்பதும் அநீதியாகும் எனவே அனைவரும் யாழ் முற்றவெளியிலே நிறையவேண்டும் இது பயங்கரவாதம் அல்ல அநீதிக்கெதிரான மக்கள் போராட்டம் அனைவரும் ஒன்றுபடுவோம் தமிழர்களது ஒற்றுமையினை மீண்டும் காட்டுவோம்
தமிழர்கள் போர்க்குணம் கொண்டவர்கள் என்ற வரலாற்றை மீண்டும் பதிவுசெய்வோம் ஒன்றுபடுவோம் அனைவரும் வாரீர்.

-ஆதி

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*