திலீபன் அண்ணாவின் நினைவாக அடையாள உண்ணாவிரதம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யார் இந்த பார்த்திபன்? ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” – என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 29ஆவது நினைவாண்டு தினம்.

இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு நல்லு}ர்க் கந்தசாமி கோவில் வீதியில், ஓருயிர் சாவைச் சந்திப்பதற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம் அகிம்சை என்று அழைக்கப்படுகின்ற கோட்பாட்டை! பல்லாயிரக் கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க தன் உடலையும், உயிரையும் துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கிய ஒரு மாவீரனின் தியாகம், எமது இனத்திற்கு ஊட்டிய விழிப்புணர்வை அந்த விழிப்புணர்வின் தேவையை நாம் இந்த வேளையில் இந்தக் காலகட்டத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது மட்டுமல்ல-அவசியமானதும் கூட!

மகாத்மா காந்தியின் அகிம்சை வாதத் தத்துவத்தைத் தனது அடிப்டை அரசியல் கொள்கையாக வரித்திருப்பதாக, இந்தியா மேலோட்டமாக முழங்கி வந்தாலும் உண்மையில் இந்தியா தனது அகிம்சைத் தத்தவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது-வருகின்றது

ஐந்து அம்ச கோரிக்கைகள்

1. தமிழீழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்,

2. தமிழீழ பிரதேசத்தில் சிறிலங்கா அரசு பொலிஸ் நிலையங்களை அமைத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

3. புனர்வாழ்வு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

4. சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

5. ஊர்காவல் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் பறிக்கப்படுவதுடன் தமிழ்க்கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்படவேண்டும்

என்ற கோரிக்கைகளை முன் வைத்து செப்டெம்பர் மாதம் 15ந் திகதி 1987ம் ஆண்டு திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார், இறுதியில் உயிரும் பிரிந்தது.

திலீபன் அண்ணாவின் நினைவாக லண்டன் Trafagal Square இல் துண்டுப் பிரசுரங்களும், சிறிய அடையாள உண்ணாவிரதமும் மற்றும் 12 நாட்கள் தொடர்ச்சியாக சமூகவலைத் தளங்களில் விழிப்புணர்வு பதிவுகளும் தரவேற்றம் செய்யப்படும். நீங்களும் இதில் கலந்து பதிவுகளை மேற்கொள்ளும்பொழுது #fastinrespect என்ற சொல்லினை பாவிக்கவும்.

thileeban

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*