புலம்பெயர் மண்ணிலிருந்து மற்றுமொரு திரைப்படம் – மௌனத்தின் காதல் (Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் தாகத்தின் மற்றொரு வரவாக சுவிஸ் மண்ணில் இருந்து மௌனத்தின் காதல் என்ற தலைப்பிலான முழுநீளத் திரைப்படம் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது.

புதியவரான வி. சரண்ராஜ் அவர்களின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்தத் திரைப்படம் தாய்ப்பாசத்தின் முன்னே தன் காதலை விட்டுத்தரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளது. அத்துடன் நட்பு, பாசம் என்பவற்றின் பெருமையை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை என்.ரஜீவன், வி.சரண்ராஜ், எஸ்.கந்துஜா, எஸ்.அர்ச்சதா ஆகியோர் ஏற்று நடித்துள்ளனர்.

Poster

வி.எஸ்.ஆர். புரடக்கசன்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் தென்னிந்தியாவில் புகழ் பெற்றுவரும் இசையமைப்பாளர் ஜி.சாய்தர்சன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்களாக ரி.நிச்சு, எஸ்.கௌதமன், எஸ்.சண்முகநாதன், என்.சசிகண்ணன் ஆகியோர் பணியாற்ற படத்தொகுப்பை ஜெனிசா பிக்ஸ் நிறுவனத்தின் எம்.யசோதரன் மேற்கொண்டுள்ளார். உதவி இயக்குநராக ஆர்.அஞ்சிதன் பணியாற்றியுள்ளார்.

முழுக்க முழுக்க ஈழத்துக் கலைஞர்களின் பங்களிப்போடு வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் டீசர் இம் மாதம் 21 ஆம் திகதி மாலை வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*