அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அழகொப்பனைத் திருவிழா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெம்முக ஆண்டு மடங்கற் திங்கள் 24ம் நாள் (09.09.2016) வெள்ளிக்கிழமை முதல் முதற் தடவையாக வலே மாநிலத்தில் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அழகொப்பனைத் திருவிழா நடைபெறத் திருவருள் குருவருள் நிறைந்து வெள்ளிக்கிழமை ஞானக்கோ ஐயங்கரப்பெருமானிற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று தமிழ் வேள்வியுடன் திருவிழா தொடங்கியது.

ஈழத்தின் நடுவில் நடைபெறும் விழாவாக திருவிழாக் காட்சிகள் அடியார்கள் நெஞ்சத்தை நிறைத்தது. தீவெட்டியுடன் இளையவர்கள் முன்செல்ல, ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த மதுசூதனன் இசைக்குழுவினர் மங்கல இசை மொழிய, எம்பெருமான் ஞானலிங்கேச்சுரர் விடைமீது அன்னை ஞானாம்பிகையுடன் எழுந்தருளி திருநடை வந்த காட்சி அருட்காட்சியாக அமைந்தது.

விழாவிற்கு மர்த்தினி நகரசபைத் தலைவர்கள் மற்றும் அதன்று உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து பங்கேற்றிருந்தனர். இவர்களை மதிப்பளித்து திருக்கோவிலால் மாலை அணிவித்து, தலைப்பாகை கட்டி மதிப்பளிப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் திருக்கோவில் வரவேற்பினை ஏற்று சிற்றுரை ஆற்றினர். தங்கள் உரையில் தமிழ்க்களின் சமய நம்பிக்கையினை வாழ்வதற்கு தமது நகரம் ஊக்குவிக்கும் என்றும் எதிர்காலத்திலும் மேலும் மக்களுக்கு நன்மை அளிக்கும் பணிகளை தாங்கள் இணைந்து ஆற்ற முடியும் என்றும் கருத்தமைய உரை ஆற்றினார்.

மர்த்தினி சைவத்திரு அடியார்களால் வீதியின் நான்கு திக்குகளிலும் நிறைகுடம் வைத்து திருநடை சிறப்பிக்கப்பெற்றது.
சுவிற்சர்லாந்து நாட்டின் பிரெஞ்மொழி பேசும் பகுதியில் கடந்த ஆண்டு திருக்குடமுழுக்குக் கண்ட இத்திருக்கோவில் வலே மாநிலத்தில் நிறுவப்பட்ட சைவநெறிக்கூடத்தால் அறங்காவல் செய்யப்படும் தமிழ்த்திருக்கோவில் இது ஆகும்.

வலே – அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 3 நாட்கள் அழகொப்பனைத் திருவிழா நடைபெறும் இவ்வேளை பேர்ன் ஞானலிங்கேச்சுரத்தில் இருந்து வருகை தந்திருக்கும் செந்தமிழ் அருட்சுனையர்கள் விழாக்காலச் சடங்குகளை மர்த்தினி திருக்கோவில் அருட்சுனையர்களுடன் இணைந்து நடாத்துகிறார்கள்.

நாளும் சிறப்பு வழிபாடுகளும், திருமுழுக்கும் நடைபெற்று எம்பெருமானிற்கு செந்தமிழ்த் திருமறையில் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. அனைத்து வழிபாடுகளையும் அடியார்கள் நேரடியாக ஆற்றலாம் என அறிவிப்பு அடியார்களுக்கு வழங்கப்பட்டது.

வழிபாட்டின் நிறைவில் அருளமுது அடியார்களுக்கு வழங்கி மகேச்சுரவழிபாட்டுடன் விழா வழிபாடுகள் நிறைவுற்றது.
சுவிற்சர்லாந்து நாட்டில் வலே மாநிலத்தில் மர்த்தினி நகரைச் சூழ 30 ஆண்டுகளாக சைவத்தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தபோதிலும் இதுவே இங்கு நடைபெறும் முதலாவது திருவிழா என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*