உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரேகைகளிலேயே மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகை. உலகின் பல பகுதிகளில் இந்த ஆயுள் ரேகையைக் கொண்டு ஒருவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் அல்லது எந்த வயதில் இறப்பார் என்பதை கணக்கிடுவார்கள். ஆனால் இது மூடநம்பிக்கை என்பது தெரிந்தும், இன்னும் நிறைய மக்கள் இதனை நம்பி வருகின்றனர்.

ஆயுள் ரேகையின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதன் தன்மையைக் கொண்டு ஒருவரது குணம், உடல் நலம், மற்றவர்களுடனான உறவு மற்றும் வாழ்க்கை போன்றவற்றை அறிய முடியும். சரி, இப்போது உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

எது ஆயுள் ரேகை?

ஆயுள் ரேகை என்பது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலுக்கு நடுவில் இருந்து கீழ் நோக்கி சென்று மணிக்கட்டுடன் இணையும். இந்த ஆயுள் ரேகை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

தடித்த மற்றும் மெல்லிய ஆயுள் ரேகை

சிலரது கைகளில் ஆயுள் ரேகை தடிமனாகவும் ஆழமாகவும், இன்னும் சிலரது கைகளில் மெல்லியதாகவும் லேசாகவும் இருக்கும். ஆயுள் ரேகை தடிமனாக இருந்தால், அவர்கள் அடிக்கடி சிறுசிறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். அதுவே மெல்லியதாக இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பார்கள்.

குட்டையான ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை குட்டையாக அல்லது சிறியதாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு செல்வதற்கு ஏற்ற ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பர். இந்த வகையான ரேகையைக் கொண்டவர்கள் எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்கமாட்டார்கள் மற்றும் இவர்களது பொறுப்புக்களை நிறைவுப்படுத்த அடிக்கடி யாரேனும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

உடைந்த ஆயுள் ரேகை

ஆயுள் ரேகையில் பிளவு கொண்டவர்கள் தனிப்பட்ட பண்பினைக் கொண்டவர்களாக இருப்பர். அதுவும் அவர்கள் ஒரு செயலை எடுத்தால், அதை முடிக்காமல் ஓய்வு எடுக்கமாட்டார்கள். மேலும் எடுக்கும் செயலை முற்றிலும் முடித்துவிட்டு தான், மற்றொரு செயலில் ஈடுபடுவார்கள்.

இரட்டை ஆயுள் ரேகை

சிலருக்கு இரண்டு ஆயுள் ரேகை இருக்கும். இப்படிப்பட்ட ரேகையைக் கொண்டவர்கள் வலிமையானவர்களாகவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த அதிர்ஷ்டசாலிகள் எப்போதும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பர்.

சுக்கிர மேடு மற்றும் ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை சுக்கிர மேட்டில் இருந்து விலகி காணப்பட்டால், அவர்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பார்கள். அதுவே சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கி காணப்பட்டால், அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

குரு மேடு மற்றும் ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை குரு மேட்டில் ஏறிக் காணப்பட்டால், அவர்கள் லட்சிய உணர்வு, தன்னடக்கம், உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கீழ் செவ்வாய் மேடு மற்றும் ஆயுள் ரேகை

ஒருவருக்கு ஆயுள் ரேகையானது கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்தால், அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள், அடக்கம் இல்லாதவர்களாக இருப்பர், சண்டைகளில் அதிகம் ஈடுபடுபவர்களாக இருப்பர்.

ஆயுள் ரேகையின் மேலான ரேகை ஆயுள்

ரேகையில் இருந்து ஒரு ரேகை மேல் நோக்கி குரு மேட்டை பார்த்தவாறு இருந்தால், அத்தகையவர்கள் வாழ்வில் எப்போதும் வெற்றியைக் காண்பவர்களாக அதிர்ஷ்டமுடையவர்களாக இருப்பர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*