கதாநாயகிகள் திருமணத்துக்கு பிறகு நடிப்பது தவறு அல்ல: பிரியாமணி, மம்தாமோகன்தாஸ் கருத்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருமணத்துக்கு பிறகு கதாநாயகிகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது தவறு அல்ல என்று பிரியாமணி, மம்தா மோகன்தாஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் டைரக்டர் விஜய்யும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர தயாராகி வருகிறார்கள். அமலாபால் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பது விஜய் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகும்படி அமலாபாலை நிர்ப்பந்தித்தும் கேட்காமல் புதிய படங்களில் அவர் நடித்து வருவதே இந்த திருமண முறிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அமலாபால் விவகாரம் சக நடிகைகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணத்துக்கு பிறகு கதாநாயகிகள் தொடர்ந்து நடிப்பது தவறு அல்ல என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை பிரியாமணி இது குறித்து கூறியதாவது:-

“வேலைக்கு போகும் பெண்கள் சாதிக்கிறார்கள். நிறைய திறமைகளையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். திருமணமான பெண்கள் குடும்பத்தையும் தொழிலையும் நன்றாக கவனிக்கின்றனர். நடிகைகளை பொறுத்தவரை அவர்களுடைய சினிமா வாழ்க்கை திருமணத்துக்கு பிறகு முடிவுக்கு வந்து விடும் என்றும் ரசிகர்கள் குறைந்து விடுகிறார்கள் என்றும் கணிப்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமைகள் மாறி வருகிறது.

திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதனை நிகழ்த்துகிறார்கள். இந்தியில் கரீனா கபூர், வித்யாபாலன் போன்றோர் திருமணம் செய்துகொண்ட பிறகு நிறைய படங்களில் நடித்து சிறந்த நடிகைகளாக வலம் வருகிறார்கள். ஜோதிகாவும் நடிக்கிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்துக்கொண்டு இருக்கிறார். எனவே நடிகைகள் திருமணம் ஆனதும் நடிப்பதை விட்டுவிட வேண்டும் என்பது பழைய சிந்தனை.

குடும்பம், குழந்தைகளை கவனித்துக்கொண்டே அவர்கள் ஏன் தொடர்ந்து நடிக்கக் கூடாது? சமூகத்துக்காக நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல.”

இவ்வாறு பிரியாமணி கூறினார்.

நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியதாவது:-

“ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மனைவியான பிறகு குடும்பத்தை பார்க்க வேண்டும், கணவரை கவனிக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்கள் வருகிறது. நடிகையாக இருந்தால் இதே பணிகளுடன் தன்னை அழகாக வைத்துக்கொள்ள கவனம் செலுத்த வேண்டும். படப்பிடிப்புக்காக வெளியூர்களுக்கும் செல்ல வேண்டும்.

ஆனால் கணவன்மார்கள், நடிகைகள் தனக்கு உணவு சமைத்து, துணிகளை துவைத்து குடும்ப வேலைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் திருப்தி ஏற்பட்டால்தான் வேலைக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றைய நடிகைகள் தங்களுக்கு பாதுகாப்பின்மை இருப்பது போன்று உணர்கிறார்கள். எனவே பெண்கள் திருமணம்பற்றி சிந்திப்பதை விட்டு அவர்களின் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து. பெண்கள் தங்களுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று யாரேனும் கருதினால் அவர்கள் நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை நிக்கி கல்ராணி கூறும்போது, “திருமணத்துக்கு பிறகு நடிகைகள் சினிமாவில் நடிக்கக் கூடாது என்பது பிற்போக்குத்தனம். இந்த நிலைமையை மாற்ற வேண்டும்” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*