கள்ளச்சாவி பட இயக்குனரின் புதிய படம் மாற்றான் தோட்டத்து மல்லிகா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கள்ளச்சாவி என்ற படத்தை இயக்கிய ராஜேஷ்வரன் இயக்கும் புதிய படத்திற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகா என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை பற்றி பார்ப்போம்..

டிஜிட்டல் புரட்சியில் முக்கியமான வரவு வீடியோ கேமரா அமைந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் சிறிய வகை கையடக்க கேமராக்கள், காதலியுடனோ அல்லது மனைவியுடனோ அந்தரமாக இருப்பவர்கள் அதை படம்பிடித்து வைத்துக்கொண்டு பின் வரும் நாட்களில் அதை பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறார்கள்.

சில நேரங்களில் அந்த செல்போன் தவறுதலாக காணாமல் போனாலோ அல்லது பழுது பார்க்க தரும்போது அந்த வீடியோ காட்சியை காணும் நபர்கள் தான் பார்த்து ரசிப்பதோடு நண்பர்களுக்கும் அனுப்புவது, இணையதளங்களில் பரப்பி விடுவது என செயல்படுவதினால் இதில் இருப்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள், சமுதாயத்தில் அவமதிப்புக்குள்ளாகிறார்கள்.

சமீபகாலங்களில் இதனால் சில தற்கொலைகள் மற்றும் கொலை சம்பவங்களும் நடந்தேறியது இதுபோன்ற செயல்பாடுகள் தவறு என்று வலியுறுத்தும் விதமாக தயாராகியுள்ள படம்தான் எல்.பி.ஆர்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘மாற்றான் தோட்டத்து மல்லிகா’.

இதில் ரவிராகுல், கவின் கார்த்திக், ரீனா ராய், நிஷா, ஆலிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ்வரன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘கள்ளச்சாவி’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்திற்கு ரமேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜ் பாஸ்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*