பேஸ்புக்கில் காவ்யா மாதவன் பெயரில் போலி கணக்கு: ஆபாச கருத்து வெளியிட்ட கேரள வாலிபர் சிக்கினார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி நடிகை காவ்யாமாதவன் பெயரில் ஆபாச கருத்து கேரள வாலிபர் சிக்கியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பாமரன் முதல் பிரபலங்கள் வரை இணைந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பிரபலங்களின் சமூக வலைதளங்களை பின்பற்றுபவர்கள், பாராட்டு தெரிவிப்பவர்கள் அதிகம் என்பதால் இந்த இணையதளங்களை பார்வையிடுபவர்கள் அதிகமாக உள்ளனர்.

இதை பயன்படுத்தி பிரபலமானவர்களின் பெயரில் பல்வேறு போலி சமூக வலைதளங்களும் தொடங்கப்பட்டு அவர்கள் பெயரில் அவதூறு கருத்துக்களை வெளியிடும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. நடிகர்–நடிகைகள் பெயரில் தான் இது போல பல போலி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது.

பிரபல மலையாள நடிகையான காவ்யா மாதவனும் தற்போது இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளார். அவரது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஆபாச கருத்துக்களும் அடிக்கடி வெளியிடப்பட் டன.

நடிகை பெயரிலான பேஸ்புக் தளம் என்று நம்பி அதை பார்வையிட்ட பலரும் ஆபாச கருத்துக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது நடிகை காவ்யா மாதவன் கவனத்துக்கும் கொண்டுச் செல்லப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது பற்றி கொச்சி போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கொச்சி தனிப்பிரிவு போலீஸ் துணை உதவி கமி‌ஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சைபர் செல் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தைச் சேர்ந்த அரவிந்த் பாபு என்பவர் இந்த போலி கணக்கை தொடங்கி உள்ளது தெரிய வந்தது. அவரது நண்பர்கள் ஒருவரின் ஆவணங்களை திருடி இந்த கணக்கை தொடங்கி ஆபாச கருத்துக்களை வெளியிட்டதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அரவிந்த் பாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காவ்யாமாதவன் பெயரில் மேலும் பல போலி கணக்குகள் உள்ளதாகவும், பிரபல நடிகைகள் பலர் பெயரிலும் இது போல போலி கணக்குகள் தொடங்கப்பட்டு செயல்படுவதாகவும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இந்த போலி கணக்குகளை கண்டுபிடித்து அதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*