தீபிகா படுகோனே சம்பளம் ரூ.12 கோடியாக உயர்வு

பிறப்பு : - இறப்பு :

இந்தி நடிகை தீபிகா படுகோனே சம்பளம் ரூ.12 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை அதிக சம்பளம் வாங்கி வந்த கங்கனா ரணாவத்தை அவர் முந்தினார். கரீனா கபூர் ரூ.10 கோடி வாங்குகிறார்.

இந்தி நடிகர்-நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டுகிறார்கள். அவர்கள் நடிக்கும் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை வசூல் குவிக்கின்றன. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதை கருத்தில் வைத்து ஊதியத்தை ஏற்றுகிறார்கள்.

இந்தியில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான், அக்‌ஷய்குமார் போன்றோர் ஒரு படத்துக்கு ரூ.40 கோடி முதல் ரூ.60 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.

அதிக சம்பளம் வாங்கும் இந்தி நடிகைகள் பட்டியலில் இதுவரை கங்கனா ரணாவத் முதல் இடத்தில் இருந்தார். இவர் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் அறிமுகமானவர்.

கங்கனா ரணாவத் நடித்து 2 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘குயின்’ படம் வசூலில் சாதனை படைத்தது. ரூ.12 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.97 கோடி வசூலித்தது. இதைத்தொடர்ந்து கங்கனா ரணாவத் தனது சம்பளத்தை ரூ.11 கோடியாக உயர்த்தினார். தற்போது தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

இந்தியில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சஞ்சய் லீலா பஞ்சாலி தனது புதிய படத்தில் நடிக்க தீபிகா படுகோனேயை அணுகினார். அந்த படத்தில் நடிக்க தீபிகா ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த தொகையை கொடுக்க அவர் சம்மதித்து விட்டாராம். ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தீபிகா படுகோனே பிரபலமாக இருக்கிறார்.

இந்தி நடிகைகள் கரீனா கபூர் ரூ.10 கோடியும், வித்யாபாலன் ரூ.7 கோடியும், அனுஷ்கா சர்மா ரூ.6 கோடியும், அலியாபட் ரூ.5 கோடியும் சம்பளம் வாங்குகின்றனர். தமிழ், தெலுங்கு பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் புதிய படமொன்றில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit