இளம் தலைமுறையினருக்கு தோல்வியா?? சிறந்த நிவாரணம் நீங்கள் தயாரா…?

பிறப்பு : - இறப்பு :

ஒரு முயற்சியில் தோற்றுவிட்டால் அதிலேயே மூழ்கி விடுவதோ, அல்லது அதிலிருந்து போராடி மீண்டு வருவது என்பதெல்லாம் இதுவரை நாம் அறிந்த ஒரு விஷயம்தான்.

இந்த மீண்டு வரும் காலம் என்பது தோல்வியின் வீரியத்தை பொருத்து அமையும். ஆனால் மில்லினயல் தலைமுறை இந்த தோல்விகளை ஏற்காத தலைமுறையாக இருக்கிறது. இப்போது 30 வயதுக்குள் இருக்கும் தலைமுறையினர் அனைவருமே தோல்வியை கண்டு துவளுவதோ, அதிலிருந்து மீண்டு வர காலம் எடுத்து கொள்வதோ இல்லை என்கிறது ஆய்வு.

தோல்விகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதனை விரும்பத்தகாத விஷயமாகவே பார்க்கத் துவங்கி விட்டனர். ஒருவேளை அதனையும் மீறி தோற்றுவிட்டால் அடுத்த நிமிடமே அதனை சரி செய்யும் வேலைகளில் இறங்கி விடுகின்றனர்.

அதைவிட அதிகமான செயல்திறனோடு அதனை வெற்றி கொள்ளும் மனநிலைக்கு தங்களை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் இப்படி இருப்பதற்கு என்ன காரணம்? இதில் இவர்களுக்கு உள்ள சாதக, பாதகங்கள் என்ன? என பல கேள்விகளுக்கு மில்லினியல்களின் பதில் இது தான்.

தொழில்நுட்பம் தரும் பாடம்:

இவர்கள் அதிகமாக தொழில்நுட்பத்தோடு இணைந்து காணப்படும் தலைமுறையாக உள்ளனர். இவர்களது மனநிலை கிட்டத்தட்ட தொழில்நுட்ப கருவிகள் போலவே மாறி இருக்கிறது. ஒரு மென்பொருள் ப்ரோக்ராம் வேலை செய்யவில்லை என்றால் அதிலுள்ள பிரச்னை சரிசெய்து ரன் செய்வது போலவே இவர்கள் தங்கள் தோல்வியை அணுக ஆரம்பித்து விட்டார்கள்.

இது வேலை, செயல்பாடுகளில் மட்டுமல்ல சில நேரங்களில் காதல், நட்பு போன்ற தங்களது தனிப்பட்ட விஷயங்களையும் ஃபார்மெட் செய்து திரும்ப பதிவேற்றும் ஹைடெக் சமூகமாக மாறியுள்ளனர். இதனால் தோல்வி இவர்களை பெரிதும் பாதிப்பதில்லை.

அக்கறையான தலைமுறை;

தன்னைப் பற்றியும், தன்னை சுற்றியுள்ளவர்களை பற்றியும் மிகுந்த அக்கறையுள்ள தலைமுறையாக இந்த தலைமுறையுள்ளது. இவர்கள் தோல்விகளுக்காக தவறான முடிவுகளை கையில் எடுக்கமாட்டார்கள். தன்னை மனரீதியாக மிக அதிகமாக பலப்படுத்தி கொள்கிறார்கள்.

தங்களது தோல்விகளை சமூக வலைதளங்களில் ஒற்றை போஸ்டில் உடைத்தெறியும் திறன் இவர்களிடம் உள்ளது. தங்களை மீட்டெடுக்கும் நேரத்தை மிக சொற்ப நேரங்களில் இவர்களால் செய்ய முடிகிறது.

அக்ரஸிவ் ஜெனரேஷன்:

தோல்விகளால் நிறைந்த ஒரு வேலையை தானாக முன்வந்து எடுத்து அதனை ஒரு ‘கேம்’ போல அணுகி அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல இவர்களால் எளிதில் முடிகிறது. இதற்கு சில நேரடி உதாரணங்களும் உள்ளன. உலகத்தை ஒரே இடத்தில் இணைப்பது, பகிர வைப்பது கடினம் என்பதை உடைத்தது மார்க் சக்கர்பெர்க் எனும் ஒரு மில்லினியல்தான். ‘வெளிநாடுகளில் தோற்கும் அணி இந்தியா’ என்பதையெல்லாம் கேட்கப் பிடிக்கவில்லை, தோல்வி பிடிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப் பாதைக்கு மாற்றிய விராட் கோலியும் மில்லினியல்தான்.

காதல் தோல்விகள், சர்ச்சைகள் என நிறைந்த வாழ்க்கையில் இசைக்காக ஒரு கூட்டத்தை தன் பக்கம் ஓடி வரவழைத்த ஜஸ்டின் பைபர், மில்லினியல்தான். இந்த அக்ரஸிவ் மனிதர்களின் உதாரணங்கள் மட்டுமல்ல. இந்த தலைமுறையும் கிட்டத்தட்ட அப்படிதான் இருக்கிறது.

ப்ளஸ்:

1. மேலைநாட்டு கலாசாரம், உணவு, உடையில் மட்டுமல்ல, எளிதில் தோல்விகளை விட்டு வெளியேறும் பக்குவம் மில்லினியல் தலைமுறையினரிடம்தான் அதிகமாக உள்ளது.

2. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் உலக அளவில் 75% உங்கள் தலைமுறை வெற்றி பெறுகிறது. செல்ஃபி தலைமுறை என வர்ணிக்கப்பட்டாலும் சுயநலமில்லாத தலைமுறையாக உலகத்தின் பார்வையில் இந்த தலைமுறை இருக்கிறது. அடுத்தக்கட்டத்துக்கு எளிதில் நகரும் தலைமுறை.

3. அடுத்த தலைமுறைக்கான தேவை, அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் வேலையை இந்த தலைமுறைதான் முடிவு செய்கிறது. இதற்கு முந்தைய தலைமுறையில் அந்த பழக்கமில்லை.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

மணிப்பூரை புரிந்து கொள்வோம்… இரோமை தெரிந்து கொள்வோம்…!
ஒரு நீண்ட போராட்டம், வேறு வடிவில் பரிணமித்து இருக்கிறது. ஆம். பதினாறு ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்து இருக்கிறார் இரோம் சர்மிளா.

“எனது போராட்டத்துக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு நேர்மையான பதிலும் கிடைக்கவில்லை. எனவே 16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியன்று முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, தேர்தல் மூலம் தொடர்ந்து போராடப்போகிறேன்’’ என்று அறிவித்து இருக்கிறார் இந்த இரும்பு பெண்மணி.

மைனஸ்:

1. தோல்விகளை ஏற்காமல் அதனை சரி செய்யும் வேலைக்கு மாறும்போது. இந்த வேகம் தெரியாத முந்தைய தலைமுறையை கோபத்துடன் அணுகுவது.

2. முந்தைய தலைமுறையின் அனுபவத்தை புறக்கணிப்பது.

3. அனைத்து உணர்ச்சிகளையும் உடனடியாக வெளிப்படுத்தி உறவுகளில் பலமற்று இருப்பது. காதல், நட்பு உள்ளிட்ட‌ தோல்விகளில் இருந்து உடனடியாக வெளியே வந்தாலும் திடமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் தவிப்பது.

தோல்விகளை ஏற்காமல் இருப்பது, அதிலிருந்து வேகமாக வெளிவருவது எல்லாம் நல்ல விஷயம்தான்.

தோல்விகளை சரியாக புரிந்து கொள்ளாமல் போனால் மீண்டும் சரிவு இவர்களை நோக்கி வரும். இதனை இவர்கள் புரிதலோடு அணுகினால் இந்த நூற்றாண்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்யும் தலைமுறை இவர்களாகத்தான் இருப்பார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit