6 வயது சிறுவனின் துப்புரவு தொழிலாளி கனவை நிறைவேற்றிய தொண்டு நிறுவனம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏதன் டீன் என்ற ஆறு வயது சிறுவன் துப்புரவு தொழிலாளியாக வேண்டும் என்ற ஆசையை தனது பிறந்தநாளில் நிறைவேற்றியுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் வசித்து வரும் கென் டீன் என்பவரது மகன் ஏதன் டீன் (6). சுவாசக் கோளாறு மற்றும் உணவு செரிமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டதால், 5 வருடமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும், ஏதனின் மருத்துவ செலவுகளை ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அந்த தொண்டு நிறுவனம் குழந்தைகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏதனிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறாய்? யாரை சந்திக்க விரும்புகிறாய்? என பல கேள்விகள் கேட்கபட்டன.

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஏதன் ஒரே பதிலை தான் கூறினார். அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஏதனின் அந்த வினோதமான பதில் துப்புரவு தொழிலாளியாக ஆசை என்பதே.

இந்நிலையில், ஏதனின் பிறந்த தினமான நேற்று அவரது தந்தையின் உதவியுடன் தொண்டு நிறுவனம் ஆசையை நிறைவேற்றும் வகையில், ஏதனின் பெயர் எழுதப்பட்ட துப்புரவு வாகனத்தை வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்தியது. இதை கண்ட ஏதன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

பின்பு, துப்புரவு தொழிலாளி தொப்பியை அணிந்து கொண்டு வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து நகரை வலம் வர ஆரம்பித்தான். அப்போது, அவரது பெற்றோரும், தொண்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களும் கண்களில் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதையடுத்து, பல பிரமுகர்களுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டு தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டான்.

இதனால், அந்த தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சமூக வலைதளங்களில் மக்களிடமிருந்து பெரும் வரவேற்புகளும், பாராட்டுகளும் குவிந்து கொண்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*