சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாகிய பிரான்ஸ் நாட்டு அழகி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

201607271349093211_French-model-pair-with-Rajkamal_SECVPF

சின்னத்திரை நடிகர் ஒருவருக்கு பிரான்ஸ் நாட்டு அழகி ஜோடியாக நடித்திருக்கிறாராம். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

சின்னத்திரை நடிகர் ராஜ் கமல் தற்போது வெள்ளித்திரையில் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சண்டிக்குதிரை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ‘மேல் நாட்டு மருமகன்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் ராஜ்கமலுக்கு ஜோடியாக பிரான்ஸ் நாட்டு அழகி ஆண்ட்ரீயன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா ஆகியோரும் நடித்துள்ளனர்.

எம்.எஸ்.எஸ். என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தை உதயா கிரியேஷன் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ளார். வே.கிஷோர் குமார் இசையமைக்க, கே.கெளதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர்.

பணம், புகழ், காதல் என்று ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு ஆசை உள்ளது. இந்த படத்தின் நாயகன் ஒரு அயல்நாட்டு பெண்மணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு மேல்நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். அப்படியிருக்கும் நாயகனின் லட்சியம் நிறைவேறியதா? என்ற திரைக்கதையுடன் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஏற்கெனவே, கமல்ஹாசன், சிவகுமார் நடிப்பில் ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற திரைப்படம் 41 வருடங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit