ஒன்றுக்கு மேற்பட்ட முறை திருமணம் முற்றிலும் சரி: கங்கனா ரனாவத் பேட்டி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு திருமணம் நடக்கும் போது பலமுறை திருமணம் நடக்கும் என நம்புகிறேன் என்று கங்கனா ரனாவத் பேட்டியளித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர் டெல்லியில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டார். ஆடை வடிவமைப்பாளர் மானங் கங்வானி வடிவமைத்த மார்டன் உடையை அணிந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து சென்று அசத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத்…

“ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எனக்கு பிடிக்கும். யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேச மாட்டேன். எனது முதல் திருமணத்துக்காக உடையை மானங்தான் வடிவமைக் வேண்டும் ”என்றார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிருபர்கள் “என்ன… முதல் திருமணமா? பலமுறை திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று கேட்க…. “ஏன் கூடாது… ஒரு திருமணம் நடக்கும் போது பலமுறை திருமணம் நடக்கும் என நம்புகிறேன்” என்றார் சாதாரணமாக.

தொடர்ந்து கூறிய அவர்…. “ நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். எனக்கு பணம் சம்பாதிக்க, செலவு செய்ய பிடிக்கும். எவ்வளவு நான் சம்பாதிக்கிறேன் என்பது என் சகோதரிக்குதான் தெரியும். பணபரிமாற்றம், முதலீடு, வருமானவரி செலுத்துவது எல்லாவற்றையும் அவர் தான் கவனித்துக் கொள்கிறார்.

குடும்ப வாழ்க்கையில் இரண்டு, மூன்று குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளும் திட்டம் இல்லை. வீடு நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும்” என்றார்.

கங்கனா ரனாவத்துடன் நடிகர்கள் ஆதித்யா பஞ்சோலி, அத்யாயன் சுமன், ரித்திக்ரோஷன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. முதல் கணவர் யாரோ? எத்தனை பேரை மணக்க திட்டம் வைத்திரக்கிறாரோ? என்று இந்தி பட உலகினர் ‘கிண்டல்’ அடிக்கிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*