அரங்கத்தினுடாக ஆற்றுப்படுத்தல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

govt

ஈழத்தில் நான்கு தாசப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தமும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலரை உளநோயாளர்களாக உருவாக்கியுள்ளது.

முப்பது ஆண்டுகளாய் போராட்ட காலத்தில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் வரலாற்றில் 2007ம் ஆண்டில் முதல் மே 2009 வரை உறவுகளையும், உடைமைகளையும் ,தொலைத்து பல வித இன்னல்களையும் எதிர்நோக்கி எஞ்சிய மக்கள் முகாம் வாழ்விற்குள் உள்வாங்கப்பட்டனர்.

ஒரு இனத்தினை அழிப்பதினையே குறியாக கொண்டு இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து முள்ளிகுளம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நடாத்திய கொடூரத் தாக்குதலிகளிலும் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீதும் நடாத்திய கொடூரமான தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் அதேவேளை, பல ஆயிரகணக்கானோர் உடல் அங்கங்களை இழந்தும் படுகாயமுற்று பல சொல்லிட முடியாத துயரங்களையும் வேதனைகளையும் அடைந்தார்கள்.

இதில் நேரடியான பாதிப்பின் உச்சத்தில் அங்கங்களை இழந்தவர்கள் ,உறவுகளை இழந்தவர்கள் ,கண்ணெதிரே சூடுபட்டு விழுந்த உறவுகளை கைவிட்டு ஓட வேண்டிய நிலையில் ஒடியவர்கள் , ஒவ்வொரு இடங்களிலும் இருந்து தப்பி வரும்போது காயமுற்றவரைக் காப்பாற்ற முடியாமல் வந்தவர்கள், பாதி உயிருடன் பதுங்குழியில் விட்டு வந்தவர்கள், உயிருக்காக போராடிய உறவுகளுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்தவர்கள் ஒருபுறம், இறந்த உறவினர்களது உடலுக்கு அருகிருந்து கதறியழ முடியாது, இறுதிக் கிரிகைகளைச் செய்ய முடியாது, யார் இறந்தார்கள் எனத் தெரியாது, நடை பிணங்களாய் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்கள்

இவர்கள் சவால்களுக்கும் , பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும். கஷ்டங்களுக்கும், மனச்சிக்கல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், சித்திரவதை, கடத்தல், காணமல் ஆக்கப்படல், இடைத்தங்கல் முகாம்கள் நீண்டகால தடுப்பு ,சிறை வாழ்வு , திறந்தவெளிசிறைச்சாலைக்குள் , இனப்படுகொலை என, பல்வேறுபட்ட அவலகரமான சம்பவங்கள், காட்சிகளையும் இனச்சுத்திகரிப்பு போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்து வந்தவர்கள் அவற்றின் உணர்வுகளை எதிர்கொள்ள முடியாது இன்று துவண்டு போயுள்ளனர்.

இவர்கள் உடல் ரீதியாக , உளரீதியாக சமூக ,பொருளாதார ரீதியாக, போர் நடைபெற்ற இடங்களில் மீள் குடியேற்றப் பட்ட ஒவ்வொரு தனிநபரும் ஏதேவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இன்றய சூழலில் பாதிப்புக்களை சுமந்து வாழ்ந்து வரும் உறவுகளுக்கு வடுவாய், வலியாய் பதிந்து போன நினைவுகளை, மனதில் அடக்கிய அபிலாசைகளும், மக்கள் பலமும் ,புரட்சியும் , தியாகங்களின் உன்னதமும் “எல்லாம் போச்சு” என்ற உணர்வு, அவலகரமான சம்பவங்கள், காட்சிகளைக் கண்டு அனுபவித்தே வந்துள்ளனர்.

அவர்கள் மனதில் பதிந்த காட்சிகள் ஆழ் மனதில் பதியப்பட்டு எண்ணங்களாக தேக்கி வைக்கப்படடிருக்கின்றது தமது உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர முடியாது, அவற்றிலிருந்து விடுபட வழி தெரியாது, வழி கிடைக்காமல் பலர் வாழ்கின்றார்கள்.

பிறந்த மண்ணில் எத்தனை ஆயிரம் உயிர்கள் இன்னமும் அடைபட்டு கிடக்கின்றார்கள், உறவுகள் புதையுண்ட மண்ணில் இழப்புகளின் சோகத்தில் மூழ்கி அந்த இழப்புக்களின் சுமைகளைச் சுமக்க முடியாது சுமந்து துன்புறகிறார்கள். அவர்களது துயர் துடைத்து சுமைகளை இறக்கி ,மனத்தில் நம்பிக்கை விதைகளை விதைது புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்கு அவர்களின் நினைவுகளில் வெளியே கொண்டு வருவதற்கு அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தல் வழிவகுக்கும்

மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய விடயங்களையும், கருத்துக்களை , செய்திகளையும், அரங்கக்கலை வடிவங்களை கொண்டு அவர்கள் வாழ்ந்த சூழல்களுக்கும், அவர்களது நம்பிக்கைகளுக்கும் ஏற்ப, வடிவங்கள் மனிதரது தேவைகளுக்கு கேற்ப செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அரங்கத்தின் ஊடக ஈழத்து கலைகளான. சித்திரம், சிற்பம். பாடல். ஆடல் நாடகம், வில்லுப்பாட்டு, அரங்க விளையாட்டுக்கள் , கூத்து, வீதி நாடகம் ,படக் காட்சி எழுத்தது, இலக்கியம், வடிவங்களையும் பயன்படுத்தி இம் மக்கள் மனங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளியேற்றி அவற்றிலிருந்து மீள வழி செய்யல் உகந்தது

ஈழத்தில் கலைகளில் தனிச் சிறப்பு பெற்றது ஒர் கலை தான் “வீதிநாடகம்” வீதி நாடகம் என்றவுடன் நினைவுக்கு வருவது நான் நடித்த அல்லது பார்த்த வீதி நாடகங்கள் நினைவுக்கு வருகின்றது.

ஊர்ஊராய் செல்லும் அணியினர் ஒரு கிராமத்தில் மூன்று நான்கு சிறு குழுக்களாகப் பிரிந்து சந்து பொந்து மூளை முடிசு என எல்லாத்திசைகளிலும் இருந்து பறையடித்து அந்த ஊரில் மக்கள் கூடும் இடத்திற்கு ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகி விடுவர். வீதி நாடகத்தினை தொடங்குவதற்கு முன்னர் வந்திருப்பவர்கள் அங்கு இசைக்கப்படும் பறை மற்றும் பக்க வாத்தியங்களுன் இசைக்கேற்ப அரங்கப் பாடல்களையும் பாடி ஆடி மகிழ்வார்கள் வீதி நாடகங்கள் மக்களுக்கு விரைவாக துள்ளியமாக நேர்தியாக கருத்துக்களை கொண்டு செல்லக் கூடிய ஊடகமாகவே வீதி நாடகங்கள் இடம் பெற்று இருக்கின்றது.

நான்காம் ஈழப் போருக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் உளவியல் ஆரோக்கியத்தினை எங்களுடைய கலை. கலாச்சாரா. பண்பாட்டு. சமய. விழுமியங்களை நெறிப்படுத்தி ஆரோக்கியமான சமாளிப்பு ஆற்றல்களையும் நெறிமுறைக்குள்ளும் மனம் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தளங்களில் கருத்துப் பகிர்வு உரையாடல்கள் கேட்கவோ அல்லது உள்வாங்கும் நிலையும் காணப்பட்டு இருந்தது.

அப்போதைய சூழலில் உள நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீதம் குறைவாகவே காணப்பட்டிருக்கின்றது நான்காம் கட்ட ஈழப் போரின் பிற் பட்ட காலப்பகுதியில் கலை, கலாச்சார ,சமய, சமூக, பண்பாட்டு, விழுமியங்கள், அதிகம் பினபற்றா நிலையும் அதனுடைய வறுமையும் இதனைப்பயன் படுத்த முடியாத ஓர் உளம் சார் இன அழிப்பினை திட்டமிட்டே நடைபெற்று வருவதை பார்க்க முடிகின்றது. இவ்வாறு பாதிப்புக்குள்ளான ,உள்ளாகி கொண்டு இருக்கின்ற, உள்ளாகக் கூடிய எமது சமூகத்தினை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தலே வழி வகுக்கும்.

.
நாளாந்தம் வாழ்கையில் நடைபெறும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு துணிவோடு முகங்கொடுத்து, வாழ்க்கையை மேலும் வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ளத் தேவையான வல்லமையும் ,சக்தியையும், தைரியத்தையும், பெற்றுக்கொள்ள முடியும்.

அரங்க ஆற்றப்படுத்தல் உள்வாங்கப்பட்டிருக்கும் விடயங்கள் தற்போது உளவியல் ரீதியான பாதிக்ப்பட்டவர்களுகான புனர்வாழ்வு சிகிச்சை முறைகளில் வரைதல் ,எழுதல்,பாடல்,, ஆடல், பேசுதல், நடித்தல்,போன்றவற்றை உளவியல் சிகிச்சை முறைகளாக பயன் படுத்துகின்றார்கள்.

முரண்பாடுகளுக்கான அகிம்சை சார் தீர்வு, சமூக உரையாடல்,சமய மற்றும் இனப் பன்மைத்துவம் மற்றும் வன்முறையெர்திப்பு ஆகிய சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தி, சகல மக்களும் சமத்துவத்துடன் வாழும் ஆர்வத்தை அரங்க ஆற்றுப்படுத்தல் ஏற்படுத்தும்.

இந்த துன்பகரமான வாழ்வு எம் வாழ்வின் இறுதி அத்தியாயம் அல்ல. இன்னுமொரு புதிய வாழ்வு, சுபிட்சமும், மகிழ்ச்சியும் கொண்ட வாழ்வு எமக்காக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையினை சமூகத்திடமும் விதைக்கப்பட்டு அவை துளிர் விட்டு வளர்வதற்கு வழி வகுக்கும்.

சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளை உரியி முறையில் பெறுவதற்கும் இனம்,மொழி, சார்ந்த ஒற்றுமைத்தன்மையை உருவாக்கி சிறுவர் முதல் பெரியோர் வரை ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன்,பரந்த அறிவு, நடுநிலைமை, தற்துணிவு , சமூக இசைவு, ,விடா முயற்சி, தன்னம்பிக்கை, பல்துறை தேடல் , நிபுனத்துவ உருவாக்கம், முடிவெடுத்தல், நலன் விரும்பும் மனப்பான்மை, பங்களிப்பு, தன்னார்வுத்தொண்டு, தன்னலமற்ற சேவை, வெளிப்படத்தன்மை, ஒத்துழைப்பு, மன தைரியம் ,தலைமைத்துவம் என ஒரு ஆளுமையுள்ள சமூகத்தினை. அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தல் ஏற்படுத்திடும்.

– பாலா சுதர்சன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit