பத்து சங்கங்களுக்கு ஐந்நூறாயிரம் உரூபாய்! 2016ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டில் ரவிகரன் வழங்கல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ravi

முல்லை. மாவட்டத்தில் உள்ள பத்து சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கு தலா ஐம்பதாயிரம் உரூபாய் வழங்கும் ஊக்குவிப்பு முன்னெடுப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்தே குறித்த ஒதுக்கீடானது வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசங்களில் இருந்தும் பத்து மாதர்கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்வாங்கப்பட்டு அவற்றுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் ஐந்நூறாயிரம் உருபாய் பண ஊக்குவிப்பு வழங்கும் முன்னெடுப்பொன்று கடந்த 2016-06-27 அன்று நடைபெற்றுள்ளது.

குறித்த இந்நிகழ்வானது முல்லை. மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் மாவட்ட பணிமனையில் நடைபெற்றது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பத்து சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் செயலாளர் பொருளாளர்களும்;; கலந்துகொண்ட நிகழ்வில் ரவிகரன் அவர்கள் உரையாற்றுகையில்,

இவ்வூக்குவிப்பு முன்னெடுப்பில் உள்வாங்கப்பட்ட ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ஐம்பதாயிரம் உரூபாய் சொத்தாகின்றது.
வறுமையிலுள்ளவர்க்கும் அத்தியாவசிய தேவையிலுள்ளவர்களுக்கும் சுழற்சி முறையில் வழங்கி உதவுவதோடு, ஒழுங்கான அறவீடுகளின் மூலம் உங்கள் சங்கங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.

எம் மாவட்டத்தில் காணப்படும் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் இப்படியான ஊக்குவிப்பு முன்னெடுப்புகளை வழங்கவேண்டும் என்பதே எம் நோக்காகிறது. படிப்படியாக ஏனைய சங்கங்களும் அவற்றின் இயங்குநிலைக்கேற்ப உள்வாங்கப்படும் என்று தெரிவித்தார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit