நாட்டை ஆள்வது பொலிஸாரே – கோத்தா

பிறப்பு : - இறப்பு :

தற்போதைய அரசாங்கத்தில் கீழ், நாட்டை ஆள்வது பொலிஸாரே என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் தற்போதைய ஆட்சியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்பிவிடலாம்.

ஆனால், சமஸ்டி எனக்கூறி நாட்டை துண்டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு, நாட்டின் இறையான்மை, மற்றும் இராணுவத்தினரின் கௌவரவம் இதுவே தனது கொள்கை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டவர்களுடன் இணைந்து நாட்டின் தலைவனாகவும், அதற்காக சிறைக்குச் செல்லவும் தயார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit