காரைதீவு வைத்தியசாலையில் பணிப்பகிஷ்கரிப்பு – காவலாளியை தாக்கிய நபர் கைது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arrest_20

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் காவலாளி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரைக் கைது செய்யக் கோரியும் வைத்தியசாலையில் நேற்று சுமார் மூன்றரை மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வேளையில் வைத்தியசாலையின் காவலாளி ஐ.எல்.எம்.பாறூக் கடமையில் இருந்த போது, வைத்தியசாலையினுள் நுழைய முற்பட்ட நபர் ஒருவரை தடுக்க முயன்ற போது , காவலாளியைத் தாக்கி விட்டு ஓடியுள்ளார். இதனால் காவலாளியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் சம்மந்தப்பட்டவர் கைது செய்யப்படாததைக் கண்டித்தும் வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் நேற்று காலை 8.00 மணி தொடக்கம் அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 11.30 மணியளவில் வைத்தியசாலைக்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.பத்மசிறி, தாக்குதலுடன் சம்மந்தப்பட்ட நபர் சற்றுமுன் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையினுள் சிலர் அடிக்கடி குடிபோதையில் வந்து கடமைகளுக்கு இடையூறு செய்து, தொல்லைப்படுத்துவதாகவும் அவை ஊழியர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit