மத்திய மாகாணத்தில் சுகாதார சேவையாளர்களுக்கு பற்றாக்குறை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மத்திய மாகாணத்தில் சுகாதார சேவையாளர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுகாதார துறையை நடாத்துவதில் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய மாகாணத்தில் சுகாதார துறைக்கு வைத்தியர்கள் மாத்திரம் 300 பேர் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கிராமிய வைத்தியசாலைகளில் வைத்தியர்களே இல்லாத நிலைமை காணப்படுவதாகவும் மத்திய மாகாண சபையின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*